கவியரசு கண்ணதாசன் பாட்டுத் திறன் போட்டி

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் ஆண்டுதோறும் நடத்தும் கவியரசு கண்ணதாசன் விழாவை வரும் நவம்பர் 26ஆம் தேதி சிறப்பாக நடத்தவிருக்கிறது.

அதனை ஒட்டி இவ்வாண்டும் இரண்டு பிரிவுகளாகக் கண்ணதாசன் பாட்டுத் திறன் போட்டி நடைபெறும்.

2002 முதல் 2010 வரை பிறந்தவர்களுக்கு முதல் பிரிவாகவும் 2001லும் அதற்கு முன்னரும் பிறந்தவர்களுக்கு இரண்டாம் பிரிவாகவும் போட்டி நடைபெறும். மாணவர்களும் பொது மக்களும் இதில் பங்கேற்கலாம். கவியரசு கண்ணதாசன் இயற்றிய திரைப்பாடல்கள் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் www.singaporetamilwriters.com இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

ஆண்குரலுக்கு 50 பாடல்கள்

male-songs

பெண்குரலுக்கு 50 பாடல்கள்

female

இந்தப் பட்டியலில் உள்ள பாடல்களில் ஏதாவது ஒரு பாடலையே தேர்வு செய்து பாட வேண்டும். அந்தப் பட்டியலில் இல்லாத பாடல்கள் கண்ணதாசன் பாடல்களாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. ஆண்கள் ஆண்குரல் பாடல்களையும் பெண்கள் பெண்குரல் பாடல்களையும் பாட வேண்டும். மாற்றிப் பாடக்கூடாது.

இரு பிரிவுகளுக்கும் முதல் சுற்று வரும் 13.11.2016 ஞாயிற்றுக்கிழமை அன்று 2, பீட்டி சாலையில் அமைந்துள்ள உமறுப் புலவர் தமிழ் மொழி நிலையத்தில் நடைபெறும். அன்று காலை மணி 8.30லிருந்து பதிவு தொடங்கும். போட்டியில் பங்கேற்க விரும்புவோர்  10.11.2016ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்வதற்கான படிவத்தை இங்கே பதிவிறக்கம் செய்யலாம். படிவத்தை kannadasancontest2016@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி பதிவு செய்யலாம்.

img

சிங்கப்பூரில் பணிபுரியும்/வசிக்கும் (அடையாள அட்டை அல்லது வேலை அனுமதிச் சீட்டு நகல் தேவை) யாரும் போட்டியில் பங்கேற்கலாம்.

பரிசுகள்

முதல் பிரிவு:  மொத்தம் 6 பரிசுகள் வழங்கப்படும். பரிசுக்கேற்ற வெற்றிக் கிண்ணங்களும் சான்றிதழ்களும் வழங்கப்படும்.

இரண்டாம் பிரிவு: முதல் பரிசு  $200  இரண்டாம் பரிசு  $100   மூன்றாம் பரிசு $75 மூன்று ஊக்கப் பரிசுகள் ஒவ்வொன்றும் $50.

மேல் விவரங்களுக்கு www.singaporetamilwriters.com எனும் எழுத்தாளர் கழகத்தின் இணையத் தளத்தை நாடலாம்.