சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம், கதைக்களம் நடத்தும் காணொளியில் கதை சொல்லும் போட்டி, 2020. நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (Circuit Breaker) நடப்பில் இருக்கும் இந்தக் காலகட்டத்தில், உங்கள் குடும்பத்தினரோடு இணைந்து, சிறந்த கதையைத் தயாரித்து அதைக் காணொளியில் பதிவு செய்து அனுப்பி வைக்கவும். சுவையான கதைக்கருவுக்குப் பரிசுகள் உண்டு
விதிமுறைகள்:-

  • கதையை தானே எழுதி, வாசித்து, அல்லது இன்னொருவரை வாசிக்க வைத்தும் காணொளியில் அனுப்பி வைக்கவும். மாணவர்கள் மட்டும் புதிதாகவோ அல்லது ஏற்கனவே எழுதிய கதையை வாசித்து, பதிவு செய்து அனுப்பலாம்.
  • வார்த்தை வரம்புகள் இல்லை.
  • ஒருவர் ஒரு கதையை மட்டுமே அனுப்ப முடியும்.
  • வாசிப்பு தெளிவாக இருக்க வேண்டும்.
  • காணொளி மூன்று நிமிடங்களுக்குள் இருக்க வேண்டும்.
  • எழுத்தாளர் பெயர் மற்றும் வாசிப்பவரின் பெயரைக் காணொளியில் பதிய வேண்டாம்.

 

landscape mode இல் காணொளி எடுக்கப்பட்டிருக்க வேண்டும். காணொளிகளை உங்களுடைய திறன்பேசி கொண்டும் தயாரிக்கலாம். கதைகளை 87258701 என்ற கைப்பேசி எண்ணிற்கு வாட்ஸ்ஆப் மூலம் அனுப்பி வைக்கவும். எழுத்தாளர்/வாசிப்பவரின் பெயர்(களை) தனியே குறுஞ்செய்தியில் அனுப்பவும். உங்களது புகைப்படத்தையும் இணைத்து அனுப்பவும்.

 

மே 22-ஆம் தேதிக்குள் காணொளிகள் எங்களை வந்து சேர வேண்டும்.  சிங்கப்பூர் அடையாள அட்டை எண் உள்ள அனைவரும் பங்குபெறலாம். (All pass holders)

 

காணொளி கதைகள் தணிக்கை குழுவினரின் ஒப்புதலுக்குப் பின் வாட்ஸ்ஆப் மூலமாகவும் முகநூல் வழியாகவும் பதிவு செய்யப்படும். வாசகர்கள் மதிப்பீடு செய்வார்கள். முடிவுகள் மே 31 நடைபெறும் கதைக்களத்தில் அறிவிக்கப்படும்.

 

காணொளியில் சொல்லப்படும் சிறந்த கதைகளுக்கு ரொக்கப் பரிசுகள் உண்டு.

 

  முதல் பரிசு இரண்டாம் பரிசு மூன்றாம் பரிசு
பொதுப்பிரிவு $100.00 $70.00 $50.00
மாணவர் பிரிவு $60.00 $40.00 $30.00

 

மேல் விவரங்களுக்கு: http://singaporetamilwriters.com/ என்ற இணையதள முகவரியில் பெற்றுக்கொள்ளலாம்.

 

காத்திருக்க வேண்டாம், இன்றே கதையை எழுதி, காணொளி தயாரித்து விரைவில் அனுப்பி வைக்கவும். அனைவருக்கும் வாழ்த்துகள்.