சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம்

கம்பன் விழா 2019  மாணவர் போட்டிகள்

 (KAMBAN CONTESTS 2019 FOR SECONDARY  STUDENTS)

நாள்: 25.08.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 8:30 மணி

பதிவுசெய்ய கடைசி நாள்: 16.08.2019

போட்டிக்கான பாடல்கள்: கீழே தட்டவும்

உயர்நிலை 1&2  |  உயர்நிலை 3  |   உயர்நிலை 4&5

விதிமுறைகள்:

அ)  இந்தப் போட்டிகள் உயர்நிலை மாணவர்களுக்கு மூன்று பிரிவுகளாக நடத்தப்படும்.

ஆ)   உயர்நிலை 1&2 ஒரு பிரிவாகவும் உயர்நிலை 3 ஒரு பிரிவாகவும் உயர்நிலை 4&5 ஒரு பிரிவாகவும் போட்டிகள் நடைபெறும்.

இ)    ஒவ்வொரு பள்ளியும் ஒரு பிரிவுக்கு மூன்று மாணவர்களைப் போட்டிக்குப் பதிவு செய்யலாம். 3 பிரிவுகளுக்கும் மொத்தம் 9 மாணவர்களைப் பதிவு செய்யலாம்.

ஈ)    அந்தந்தப் பிரிவுகளுக்குரிய பாடல்கள் இணைக்கப்பட்டுள்ளன. அவற்றை மனனம் செய்து ஒப்பிக்க வேண்டும். (www:singaporetamilwriters.com எனும் எழுத்தாளர் கழக இணையத் தளத்திற்குச் சென்று ‘நிகழ்ச்சிகள்’ பொத்தானைத் தொடர்ந்து, ‘கம்பன் விழாப் போட்டிகள்’ என்ற பொத்தானை அழுத்தினால், அங்கும் பாடல்களைக் காணலாம்)

உ)    உயர்நிலை 1&2 மாணவர்கள், கொடுக்கப்பட்டுள்ள 5 பாடல்களை மனனம் செய்து ஒப்பிப்பதுடன் மூன்று எளிமையான கேள்விகளுக்குப் பதில் அளிக்க வேண்டும். எ.கா.: ராமனின் தந்தை யார்? இராவணன் எந்த நாட்டுக்கு மன்னன்? போன்ற கேள்விகள்.

ஊ)   உயர்நிலை 3 மாணவர்கள் 7 பாடல்களை ஒப்பிப்பதுடன் இராமாயணத்தில் மாணவர் தேர்ந்தெடுக்கும் ஒரு கதாபாத்திரத்தைப் பற்றி ஒரு நிமிடம் பேச வேண்டும்.

எ)    உயர்நிலை 4&5 மாணவர்கள் 10 பாடல்களை மனனம் செய்து ஒப்பிக்க வேண்டும். அத்துடன் அந்தப் பாடல்களில் இருந்து கேட்கப்படும் 3 கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டும்.

ஏ)    போட்டிக்கான விண்ணப்பத்தை பள்ளி ஆசிரியர் 16.08.2019ஆம் தேதிக்குள் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

ஐ)    போட்டி உமறுப் புலவர் தமிழ் மொழி நிலையத்தில் 25.08.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி முதல் நடைபெறும். போட்டியாளர்கள் அனைவரும் அன்று காலை 8.30 மணிக்கு அங்கு வந்து தங்கள் பதிவை உறுதிசெய்ய வேண்டும்.

ஒ)    அதிகமான மாணவர்கள் பங்கேற்றால் போட்டி இரண்டு அல்லது மூன்று பிரிவுகளாக நடத்தப்படலாம்.

ஓ)    வெற்றியாளர்களுக்கு ரொக்கப் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்படும்.

ஔ)  வெற்றி பெற்றவர்களுக்கு 14.09.2019  ஞாயிற்றுக்கிழமை அன்று உமறுப் புலவர் தமிழ் மொழி நிலையத்தில் நடைபெறும் கம்பன் விழாவில் பரிசுகள் வழங்கப்படும்.