கவியரசு கண்ணதாசன் பாட்டுத் திறன் போட்டி

பதிவு விவரங்கள் கீழே: Registration Details Below:

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் ஆண்டுதோறும் நடத்தும் கவியரசு கண்ணதாசன் விழாவை வரும் நவம்பர் 17ஆம் தேதி சிறப்பாக நடத்தவிருக்கிறது. இவ்வாண்டு பிற்பகல் 3:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை நடைபெறும். அதனை ஒட்டி இவ்வாண்டும் இரண்டு பிரிவுகளாகக் கண்ணதாசன் பாட்டுத் திறன் போட்டி நடைபெறும்.

6 வயது முதல் 14 வயது வரை உள்ளவர்களுக்கு ஒரு பிரிவாகவும் (23.09.2004 முதல் 23.09.2012 வரை) 14 வயதிற்கு மேலுள்ளவர்களுக்கு (23.09.2004க்கு முன்னர் பிறந்தவர்கள்) ஒரு பிரிவாகவும் போட்டி நடைபெறும். மாணவர்களும் பொது மக்களும் இதில் பங்கேற்கலாம். கவியரசு கண்ணதாசன் இயற்றிய திரைப்பாடல்கள் இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. ஆண்குரலுக்கு 50 பாடல்களும் பெண்குரலுக்கு 50 பாடல்களும் உள்ளன. அந்தப் பட்டியலில் உள்ள பாடல்களில் ஏதாவது ஒரு பாடலைத் தேர்வு செய்து பாட வேண்டும். அந்தப் பட்டியலில் இல்லாத கண்ணதாசன் பாடல்களைப் பாட, எழுத்தாளர் கழகத்திடம் தெரிவித்து முன் அனுமதி பெற வேண்டும். ஆண்கள் ஆண்குரல் பாடல்களையும் பெண்கள் பெண்குரல் பாடல்களையும் பாட வேண்டும். மாற்றிப் பாடக்கூடாது.

ஆண்குரலுக்கு 50 பாடல்கள்

KDasan_male_songs

 

பெண்குரலுக்கு 50 பாடல்கள்

KDasan_female

 

இரு பிரிவுகளுக்கும் முதல் சுற்று வரும் 23.09.2018 ஞாயிற்றுக்கிழமை அன்று 2, பீட்டி சாலையில் அமைந்துள்ள உமறுப் புலவர் தமிழ் மொழி நிலையத்தில் நடைபெறும். அன்று காலை 9:00 மணியிலிருந்து பதிவு தொடங்கும். போட்டியில் பங்கேற்க விரும்புவோர் 16.9.2018ஆம் தேதிக்குள் இந்த விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து முன்பதிவு செய்யலாம்.

சிங்கப்பூரில் பணிபுரியும்/வசிக்கும் (அடையாள அட்டை அல்லது வேலை அனுமதிச் சீட்டு நகல் தேவை) யாரும் போட்டியில் பங்கேற்கலாம்.

பரிசுகள்

14 வயதிற்குக் கீழ்:  மொத்தம் 6 பரிசுகள் வழங்கப்படும். பரிசுக்கேற்ற வெற்றிக் கிண்ணங்களும் சான்றிதழ்களும் வழங்கப்படும்.

 14 வயதிற்கு மேல்: முதல் பரிசு  $200  இரண்டாம் பரிசு  $100   மூன்றாம் பரிசு $75 மூன்று ஊக்கப் பரிசுகள் ஒவ்வொன்றும் $50.

REGISTER TODAY: