கவியரசு கண்ணதாசன் விருது 2016

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் ஆண்டுதோறும் நடத்தும் கவியரசு கண்ணதாசன் விழாவில் நவம்பர் 26ஆம் தேதி அன்று கவிஞர் கண்ணதாசன் விருது 2016 திரு சலீம் ஹாடி அவர்களுக்கு வழங்கப்பட்டது.

 

திருமதி ஜெயா இராதாகிருஷ்ணனுக்கு கவியரசு கண்ணதாசன் விருது 2015

k viruthu

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் ஆண்டுதோறும் அபிராமி நகைக் கடையின் ஆதரவுடன் வழங்கிவரும் கவியரசு கண்ணதாசன் விருது 2015ஆம் தொலைக்காட்சி கதை, திரைக் கதை, வசனம், பாடல்கள் எனப் பல துறைகளில் திறமைபெற்ற 34 வயது திருமதி ஜெயா இராதாகிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டது.

எழுத்தாளர் கழகத்தின் நான்கு முக்கிய விழாக்களில் ஒன்றான கவியரசு கண்ணதாசன் விழா டிசம்பர் 5ஆம் தேதி சனிக்கிழமை மாலையில் அருள்மிகு தெண்டாயுதபாணி கோயில் மண்டபத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

நாடாளுமன்ற முன்னாள் நியமன உறுப்பினர் திரு. கி. கார்த்திகேயன் விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிற்றுரை ஆற்றியதுடன் கண்ணதாசனின் இரண்டு பாடல்களையும் அருமையாகப் பாடினார்.

வெள்ளத்தால் சென்னை விமான நிலையம் மூடப்பட்டிருந்ததால் கவிஞர் முத்துலிங்கம் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இயலவில்லை. அவருக்குப் பதில் மலேசிய வழக்குரைஞர் திரு- பாண்டித்துரை பங்கேற்று கவியரசு கண்ணதாசனைப் பற்றி அற்புதமாகச் சிறப்புரை ஆற்றி அனைவரையும் கவர்ந்தார்.

கவியரசு கண்ணதாசன் பாட்டுத்திறன் போட்டியில் 14 வயதிற்குக் குறைவானவர்களுக்கான பிரிவில் “மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன?” எனும் தில்லானா மோகனாம்பாள் படப் பாலைப் பாடி முதல் பரிசைத் தட்டிச்சென்றார் செல்வி பாலச்சந்தர் ஶ்ரீவித்யா. 14 வயதிற்கு மேலுள்ளவர்களுக்கான பிரிவில் திருமதி ஶ்ரீநிவாசன் செளந்தர்யலக்ஷ்மி “பளிங்குனால் ஒரு மாளிகை” பாடலைப் பாடி முதல் பரசை வென்றார். திரு.ஜெயராஜதாஸ், திரு. சி. குணசேகரன், திருமதி வசந்தி ராமச்சந்திரன் ஆகியோர் நடுவர்களாகப் பணியாற்றினர்.

தொடக்கத்தில் கவியரசு கண்ணதாசனின் “ஆடி வா அழகு ராணி” பாடலுக்குச் செல்விகள் அஷ்மிதா ஜெயபிரகாஷ், க்ஷிரிஜா கோவிந்த் ஆகியோர் அருமையாக நடனமாடினர்.