கரிகாலன் விருது

முஸ்தபா தமிழ் அறக்கட்டளை தஞ்சாவூர்த் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அமைத்துள்ள தமிழவேள் கோ. சாரங்கபாணி இருக்கையின் வழி ஆண்டுதோறும் சிறந்த சிங்கப்பூர், மலேசியப் படைப்புகளுக்கு கரிகாற் சோழன் விருது வழங்கப்பட்டு வருகிறது.

2017ஆம் ஆண்டு முதல் பதிப்பாகப் பதிப்பிக்கப்பட்ட நூல்களுக்கு கரிகாற் சோழன் விருது வழக்கம் போல் இவ்வாண்டும் வழங்கப்படும். விழா நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். அதற்காக 2017ஆம் ஆண்டு  பதிப்பிக்கட்ட சிறுகதை, கவிதை, கட்டுரை, நாவல், நாடகம் உள்ளிட்ட அனைத்துத் துறை நூல்களின் 4 படிகளை வரும் மார்ச் 31ஆம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும். குடியுரிமை அல்லது நிரந்தரவாசத் தகுதி பெற்ற படைப்பாளர்கள் மட்டுமே இதில் பங்கேற்க முடியும்.

நூல்களை டன்லப் ஸ்ட்ரீட்டிலுள்ள திரு. முஸ்தபா அவர்களின் ரஹ்மத் பதிப்பகத்தில் (தமிழ்  புத்தக நிலையம்) ஒப்படைக்க வேண்டும்.

மேல் விவரங்களுக்கு நா. ஆண்டியப்பன் (97849105), சுப. அருணாசலம் (93221138) ஆகியோரைத் தொடர்பு கொள்ளலாம்.