எழுத்தாற்றலை வளர்க்கும் ’கதைக்களம்’


கதைக்களத்தில் கலந்துரையாடிய எழுத்தாளர்கள்

கதைக்களம் நடக்கும் நாள்: 02.07.2017

நேரம்: மாலை 4:00 – 6:00 மணி

இடம்: பெக் கியோ சமூக மன்றம்

அனுப்ப வேண்டிய கடைசி நாள்: 28.06.2017

அடுத்த மாதக் கதைக்களத்துக்கான தொடக்கவரி “ஆசை ஆசையாய்…

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகமும் பெக் கியோ சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழுவும் இணைந்து படைக்கும் கதைக்களம், மே 2013-ஆம் ஆண்டு முதல், ஒவ்வொரு மாதமும் முதல் சனிக்கிழமை (சில சமயங்களில் ஞாயிறு) அன்று 21, கிளவ்செஸ்டர் சாலையில் (Gloucester Road) அமைந்துள்ள ’பெக் கியோ சமுக மன்றத்தில்’ நடைபெற்று வருகிறது. கதைக்களத்தில் ஒரு முக்கிய தலைப்பில் சிறப்புரை இருக்கும்.

சிறுகதை மற்றும் சிறுகதை விமர்சன போட்டியில் மாணவ எழுத்தாளர்கள் கலந்துகொள்ள வரவேற்கப்படுகிறார்கள்.சிறந்த படைப்புகளை போட்டிக்கு அனுப்பி பரிசினைத் தட்டிச்செல்ல வரவேற்கப்படுகிறார்கள்.

இரண்டு போட்டிகளுக்கும் ரொக்கப் பரிசுடன் புத்தகப் பரிசும் வழங்கப்படும்.

நிகழ்ச்சியில் பங்கேற்பதன் மூலம் சிறுகதை எழுதும் உங்கள் ஆற்றலை வளர்த்துக் கொள்ள முடியும். மற்ற எழுத்தாளர்களைச் சந்தித்து உரையாடும் வாய்ப்பும் கிடைக்கும்.

சிறுகதைப் போட்டி:

‘கதைக்களம்’ போட்டிக்கு உங்களுடைய சிறுகதைகளை அனுப்பி வையுங்கள். ஒவ்வொரு மாதமும் சிறுகதைப் போட்டிக்கான தொடக்கவரி கொடுக்கப்படும். இந்தத் தொடக்கவரியில் ஆரம்பித்து 300 வார்த்தைகளில் கதைகளை எழுதி அனுப்புங்கள்.

போட்டிக்கு வரும் கதைகளில் மூன்று சிறந்த கதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு மூன்று ரொக்கப் பரிசுகள் வழங்கப்படும்.

முதல் பரிசு

இரண்டாம் பரிசு

மூன்றாம் பரிசு

50 வெள்ளி

30 வெள்ளி

20 வெள்ளி

சிறுகதை விமர்சனப் போட்டி:

நீங்கள் படித்த ஒரு சிறுகதையைப் பற்றி 300 வார்த்தைகளில் விமர்சனம் எழுதி அனுப்புங்கள். வரும் விமர்சனங்களில் சிறந்தவையாக இரண்டு தேர்வு செய்யப்பட்டு ரொக்கப் பரிசுகள் வழங்கப்படும்.

முதல் பரிசு

இரண்டாம் பரிசு

50 வெள்ளி

30 வெள்ளி

SS_கதையின்பெயர்_ஆங்கிலத்தில்_MONTHYEAR_KK.doc என்று பெயரிட்டு கதை அனுப்பவேண்டும்.

Review_கதையின்பெயர்_ஆங்கிலத்தில்_MONTHYEAR_KK.doc என்று பெயரிட்டு கதை விமர்சனங்களை அனுப்பவேண்டும்.

கதைகளையும், விமர்சனங்களையும் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: kathaikalam.astw@gmail.com  (2 வார்த்தைகளுக்கு நடுவில் ’.’ புள்ளி உள்ளதைக் கவனிக்கவும்.

இலவசமாக நடத்தப்படும் கதைக்களம் நிகழச்சிக்கு பொதுமக்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் என அனைவரும் வரவேற்கப்படுகிறார்கள்.

இடம்: பெக் கியோ சமூக மன்றம்:

Pek Kio Community Centre
21 Gloucester Road
Singapore 219458