ஆனந்த பவன் மு.கு. இராமச்சந்திரா நினைவு புத்தகப் பரிசளிப்பு 2021

கட்டுரை நூல்

விண்ணப்பப் படிவம்

பரிசுப் போட்டிக்கான விதிகள்

அ)       சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் ஆனந்த பவன் அமரர் மு.கு. இராமச்சந்திரா நினைவாக புத்தகப் பரிசளிப்பை 2010ஆம் ஆண்டு முதல் நடத்தி வருகிறது.

ஆ)       பரிசளிப்பை சிறுகதை, கட்டுரை, கட்டுரை என ஒவ்வோர் ஆண்டும் சுழற்சி முறையில் நடத்துகிறது.

இ)       2021-ஆம் ஆண்டிற்குக் கட்டுரைத் தொகுப்புக்குப் பரிசு வழங்கப்படும். எனவே 2018, 2019,2020 ஆகிய மூன்று ஆண்டுகளில் பதிப்பிக்கப்பட்ட கட்டுரை நூல்களை எழுத்தாளர்கள் இந்தப் பரிசளிப்புத் தேர்வுக்கு அனுப்பி வைக்கலாம்.

ஈ)       சிறந்த நூலாகத் தேர்ந்தெடுக்கப்படும் ஒரு நூலுக்கு 2,000 வெள்ளி ரொக்கமும் சான்றிதழும் வழங்கப்படும்.

பரிசளிப்புக்கான விதிமுறைகள்:

 1. பரிசுத் தேர்வுக்கு நூல்களை அனுப்பும் நூலாசிரியர்கள் சிங்கப்பூர்க் குடியுரிமை பெற்றவராகவோ நிரந்தரவாசத் தகுதி பெற்றவராகவோ இருக்க வேண்டும். (அடையாள அட்டையின் கடைசி நான்கு இலக்கங்களை அனுப்ப வேண்டும். தேவையெனில், அடையாள அட்டையை அவசியம் ஏற்பாட்டாளர்களிடம் காட்ட வேண்டும்)
 2. பரிசுத் தேர்வுக்கு நூல்களை அனுப்பும் நூலாசிரியர்கள் 2018, 2019,2020 ஆகிய மூவாண்டுக் காலக்கட்டத்தில் குறைந்தது ஓராண்டாவது சிங்கப்பூரில் வசித்திருக்க வேண்டும். (சான்று தேவைப்பட்டால் நூலாசிரியர் வழங்கத் தயாராய் இருக்க வேண்டும்)
 3. எழுத்தாளர் கழகத்தின் தலைவர், துணைத் தலைவர், செயலாளர் தவிர எழுத்தாளர் கழகத்தின் அனைத்து உறுப்பினர்களும் உறுப்பினரல்லாத நூலாசிரியர்களும் பரிசளிப்புத் தேர்வுக்கு நூல்களை அனுப்பலாம். (நடுவர்கள் பற்றிய விவரம் எழுத்தாளர் கழகச் செயலவை உறுப்பினர்களுக்குத் தெரிவிக்கப்பட மாட்டாது.)
 4. பரிசுத் தேர்வுக்கான படிவத்தை நிரப்பி, கையெழுத்திட்டு நூலுடன் அனுப்ப வேண்டும். படிவம் இல்லாத நூல்கள் பரிசுத் தேர்வுக்கு ஏற்றுக்கொள்ளப்பட மாட்டா.
 5. ஒரு நூலாசிரியர் குறிப்பிட்ட மூவாண்டுக் காலக்கட்டத்தில் வெளியிட்ட எத்தனை நூல்களை வேண்டுமானாலும் போட்டிக்கு அனுப்பலாம். ஆனால், ஒவ்வொரு நூலுக்கும் நான்கு பிரதிகள் கட்டாயம் அனுப்ப வேண்டும். போட்டிக்கு அனுப்பப்படும் பிரதிகள் திரும்ப அனுப்பப்படமாட்டா.
 6. போட்டிக்கு அனுப்பப்படும் நூல்கள் முதல் பதிப்பாக இருக்க வேண்டும். பதிப்பிக்கப்பட்ட ஆண்டு தெளிவாக அச்சிடப்பட்டிருக்க வேண்டும். அந்த நூல்களுக்கு வெளியீட்டு விழா நடத்தியிருக்க வேண்டிய அவசியமில்லை.
 7. போட்டிக்கு நுழைவுக் கட்டணம் இல்லை.
 8. கட்டுரைத் தொகுப்பு  நூல் ஒரே எழுத்தாளர் எழுதிய நூலாக இருக்க வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட எழுத்தாளர்கள் எழுதிய நூல்களும் பல எழுத்தாளர்களின் படைப்புகள் இடம்பெற்றுள்ள தொகுப்பு நூல்களும் போட்டிக்கு ஏற்றுக்கொள்ளப்படமாட்டா.
 9. ஓர் எழுத்தாளர் ஒரு துறையில் ஒரு முறை மட்டுமே பரிசு பெற முடியும். உதாரணமாக, கட்டுரைத் துறையில் ஓராண்டு புத்தகப் பரிசு பெறும் எழுத்தாளர் மீண்டும் கட்டுரைப் பரிசுக்குரிய போட்டியில் கலந்துகொள்ள முடியாது. சிறுகதை, கட்டுரைத் துறைகளுக்கும் இது பொருந்தும். ஆனால் ஒரு துறையில் பரிசு பெற்றவர் மற்ற துறைகளில் கலந்துகொள்ள முடியும்.
 10. சிங்கப்பூர், மலேசியா, தமிழ் நாடு ஆகிய மூன்று நாடுகளைச் சேர்ந்த மூன்று நடுவர்கள் பரிசுக்குரிய நூலைத் தெரிவு செய்வார்கள். அந்த நடுவர்களின் முடிவே இறுதியானது.
 11. கட்டுரைத் தொகுப்புகளையும் ,  நிரப்பப்பட்ட படிவத்தையும் வரும் 30.04.2021ஆம் தேதிக்குள் படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

 

மேல் விவரங்களுக்கு:

நா. ஆண்டியப்பன், துணைத் தலைவர் – 9784 9105

கிருத்திகா, மதிப்பியல் செயலாளர் – 9060 2644

விண்ணப்பப் படிவம்