மு.கு. இராமச்சந்திரா புத்தகப் பரிசு 2017

கவிதைத் தொகுப்பு

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் 2010ஆம் ஆண்டு முதல் நடத்தும் ஆனந்த பவன் அமரர் மு.கு. இராமச்சந்திரா நினைவு புத்தகப் பரிசுப் போட்டி, இவ்வாண்டு வழக்கம்போல் நடைபெற இருக்கிறது.

அமரர் மு.கு. இராமச்சந்திரா நினைவு நாளை ஒட்டி வரும் ஆகஸ்ட் மாதம் பரிசளிப்பு விழா நடைபெறும். சிறுகதை, கவிதை, கட்டுரை என மூன்று துறைகளுக்குச் சுழல் முறையில் பரிசு வழங்கப்பட்டு வருவதால் இவ்வாண்டு கவிதைத் தொகுப்பு நூலுக்குப் பரிசு வழங்கப்படும்.

அதனால் 2014, 2015, 2016 ஆகிய மூன்று ஆண்டுகளில் முதல் பதிப்பாகப் பதிப்பிக்கப்பட்ட கவிதைத் தொகுப்பு நூல்களில் இந்தப் போட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டவைகளில் இருந்து ஒன்று பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்படும்.

சிறந்த நூலாகத் தேர்ந்தெடுக்கப்படும் ஒரு நூலுக்கு 2,000 வெள்ளி ரொக்கமும் சான்றிதழும் வழங்கப்படும். போட்டிக்கான விதிகளையும் விண்ணப்பப் படிவத்தையும் www.singaporetamilwriters.com எனும் எழுத்தாளர் கழகத்தின் இணையத் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விவரங்களுக்கு:

 

muKuRa

மு.கு. இராமச்சந்திரா புத்தகப் பரிசு 2016

சிறுகதைத் தொகுப்பு

ஆனந்த பவன் உரிமையாளர் – தமிழ் மொழி ஆர்வலர் அமரர் மு.கு. இராமச்சந்திரா பெயரில் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் ஆண்டுதோறும் வழங்கும் சிறந்த நூலுக்கான $2,000 ரொக்கப் பரிசு 2016-ஆம் ஆண்டு சிறுகதைப் பிரிவிற்கு வழங்கப்படுகிறது.

முனைவர் திருமுருகானந்தத்திற்கு

மு.கு. இராமச்சந்திரா புத்தகப் பரிசு 2015
மு.கு.இராமசந்திரா புத்தகப்பரிசு 2014

மு.கு.இராமசந்திரா புத்தகப்பரிசு 2014

படவிளக்கம்: திருமதி பானுமதி இராமச்சந்திரா, திரு. த. இராஜசேகர், முனைவர் கோட்டி திருமுருகானந்தம், திரு. நா. ஆண்டியப்பன், திருமதி பரமேஸ்வரி, திரு. வீரா, திரு. சுப. அருணாசலம்

ஆனந்த பவன் உரிமையாளர் – தமிழ் மொழி ஆர்வலர் அமரர் மு.கு. இராமச்சந்திரா பெயரில் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் ஆண்டுதோறும் வழங்கும் சிறந்த நூலுக்கான $2,000 ரொக்கப் பரிசு தமிழாசிரியர் முனைவர் கோட்டி திருமுருகானந்தம் எழுதிய ‘பன்முக நோக்கில் சிங்கப்பூர்க் கவிதைகள்’ எனும் நூலுக்கு வழங்கப்பட்டது.

தேர்வுக்கு வந்த பத்து நூல்களில் சிறந்ததாக அந்த நூலை மூவரும் ஒருமனதாகத் தேர்ந்தெடுத்ததாக மூன்று நீதிபதிகளில் ஒருவரான முனைவர் க .சண்முகம் சொன்னார்.

சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ளவிருந்த வளர் தமிழ் இயக்கத்தின் தலைவர் திரு. ஆர் இராஜாராம் தவிர்க்க இயலாத காரணத்தால் விழாவில் பங்கேற்க முடியவில்லை. ஆயினும் அவர் கேட்டுக்கொண்டதற்கிணங்க, எழுத்தாளர் கழகமும் ஒப்புதல் அளித்ததால் சிண்டாவின் முன்னைய தலைமை நிர்வாக அதிகாரியும் சிங்கப்பூர் தொழில்நுட்பக் கழகத்தின் கல்வியியல் ஆய்வு மற்றும் திட்டப் பிரிவின் இயக்குநர் திரு. த. இராஜசேகர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். அவர் தமது உரையில் சிறுகதை, கவிதை, கட்டுரைக்கான இலக்கணங்களை எளிமையாகப் புரிய வைத்தார். கட்டுரை எழுதுவதற்கான சிரமங்களையும் எடுத்துரைத்தார். நீண்ட இடைவெளிக்குப் பின் மேடை ஏறிய திரு. த. இராஜசேகர் தொடர்ந்து நிகழ்ச்சிகளில் பங்குபெறுவதைப் பலரும் வேண்டினர்.

இந்தப் பொன்விழா ஆண்டில் சிங்கப்பூரின் வளர்ச்சிக்குப் பாடுபட்ட எத்தனையோ முன்னோடிச் சிங்கப்பூரர்களை நேர்காணல் கண்டும் அவர்களைப் பற்றிச் சிறப்பாக எழுதியும் வருகின்ற ஊடகங்கள், இந் நாட்டின் இலக்கிய வளர்ச்சிக்கு உழைப்பைச் சிந்திய முன்னோடி எழுத்தாளர்களைக் கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன் என எழுத்தாளர் கழகத் தலைவர் நா.ஆண்டியப்பன் கேள்வி எழுப்பினார்.

தமிழ் எழுத்தாளர் கழகத்தின் மேம்பட்ட புதிய இணைய தளத்தை திருமதி கிருத்திகா அறிமுகப்படுத்தினார். கழகம் பற்றிய தகவல்கள் அனைத்தையும் பொருத்தமாக அமைத்திருக்கிறார் என பாராட்டையும் பெற்றார்.

செயலாளர் திரு. சுப.அருணாசலம் நெறியோடு முறைப் படுத்திய நிகழ்ச்சி சற்று முன்னதாகவே முடிவுக்கு வந்தது. ஆனந்த பவன் குடும்பத்தினர் வந்திருந்து பெருமை சேர்த்ததுடன் அனைவருக்கும் விருந்தளித்தும் சிறப்பித்தனர்.