ஆனந்த பவன் மு.கு. இராமச்சந்திரா

நினைவு புத்தகப் பரிசு

mu.ku.ramachandra

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் 2010ஆம் ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் ஆனந்த பவன் அமரர் மு.கு. இராமச்சந்திரா நினைவு புத்தகப் பரிசுப் போட்டியை நடத்தி வருகிறது.

அமரர் மு.கு. இராமச்சந்திரா தமிழுக்கும் தமிழ் வளர்ச்சிக்கும் குறிப்பாக இளைய தலைமுறையினர் தாய்மொழியைக் கட்டாயம் கற்க வேண்டும் எனப்திலும் உறுதியாக இருந்தவர். அதற்காக அமைப்புகளுக்குப் பல விதத்திலும் உதவிகளைச் செய்தவர்.

அதனால் அவர் நினைவைப் போற்றும் வகையில் ஏதாவது செய்ய வேண்டும் என்று கருதி இந்தப் புத்தகப் பரிசுத் திட்டத்தை எழுத்தாளர் கழகம் முன்வைத்தது. ஆனந்த பவன் குடும்பத்தினர் குறிப்பாக அவரது துணைவியார் திருமதி பானுமதி இராமச்சந்திரா மிகுந்த மகிழ்வுடன் இதற்கு ஒப்புக்கொண்டடார். பரிசுத் தொகையான 2,000 வெள்ளியை ஆண்டுதோறும் ஆனந்த பவன் உணவகமே வழங்கி வருகிறது.

சிறுகதை, கவிதை, கட்டுரை என மூன்று துறைகளுக்குச் சுழல் முறையில் ஆண்டுதோறும் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. சிங்கப்பூர், மலேசியா, இந்தியா ஆகிய மூன்று நாடுகளில் இருந்தும் ஒரு நடுவரை நியமித்து அந்த மூன்று நடுவர்களும் சேர்ந்து பரிசுக்குரிய நூலைத் தெரிவு செய்வார்கள்.

போட்டிக்கு நூல்களை அனுப்பும் நூலாசிரியர்கள் சிங்கப்பூர்க் குடியுரிமை பெற்றவராகவோ நிரந்தரவாசத் தகுதி பெற்றவராகவோ இருக்க வேண்டும். (அடையாள அட்டையின் இருபக்க நகல் அவசியம் அனுப்ப வேண்டும்)

போட்டிக்கு நூல்களை அனுப்பும் நூலாசிரியர்கள் குறிப்பிட்ட மூவாண்டுக் காலக்கட்டத்தில் குறைந்தது ஓராண்டாவது சிங்கப்பூரில் வசித்திருக்க வேண்டும். (சான்று தேவைப்பட்டால் நூலாசிரியர் வழங்கத் தயாராய் இருக்க வேண்டும்)

எழுத்தாளர் கழகத்தின் தலைவர், செயலாளர் தவிர மற்ற உறுப்பினர்கள் அனைவரும் உறுப்பினரல்லாதவர்களும் போட்டியில் பங்கேற்கலாம்.

போட்டிக்கான படிவத்தை நிரப்பி, கையெழுத்திட்டு நூலுடன் அனுப்ப வேண்டும்.

ஒரு நூலாசிரியர் குறிப்பிட்ட மூவாண்டுக் காலக்கட்டத்தில் வெளியிட்ட எத்தனை நூல்களை வேண்டுமானாலும் போட்டிக்கு அனுப்பலாம். ஆனால் ஒவ்வொரு நூலுக்கும் நான்கு பிரதிகள் கட்டாயம் அனுப்ப வேண்டும். போதிய பிரதிகள் கைவசம் இல்லாவிட்டால் தெளிவாக நகலெடுத்து அனுப்பலாம். ஆனால் ஒரு பிரதி கண்டிப்பாக அசல் பிரதியாக இருக்க வேண்டும். போட்டிக்கு அனுப்பப்படும் பிரதிகள் திரும்ப அனுப்பப்படமாட்டா.

போட்டிக்கு அனுப்பப்படும் நூல்களில் பதிப்பிக்கப்பட்ட ஆண்டு தெளிவாக அச்சிடப்பட்டிருக்க வேண்டும். அந்த நூல்களுக்கு வெளியீட்டு விழா நடத்தியிருக்க வேண்டிய அவசியமில்லை.

போட்டிக்கு நுழைவுக் கட்டணம் இல்லை.

நூல் முதல் பதிப்பாக இருக்க வேண்டும். பின்னைய பதிப்புகளோ திருத்திய பதிப்புகளோ ஏற்றுக்கொள்ளப்படமாட்டா.

நூல் ஒரே எழுத்தாளர் எழுதிய நூலாக இருக்க வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட கவிஞர்கள் எழுதிய நூல்களும் பல கவிஞர்களின் கவிதைகள் இடம்பெற்றுள்ள தொகுப்பு நூல்களும் போட்டிக்கு ஏற்றுக்கொள்ளப்படமாட்டா.

ஓர் எழுத்தாளர் ஒரு துறையில் ஒரு முறை மட்டுமே பரிசு பெற முடியும். சிறுகதைத் துறையில் பரிசு பெறும் எழுத்தாளர் மீண்டும் சிறுகதைப் பரிசுக்குரிய போட்டியில் கலந்துகொள்ள முடியாது. கட்டுரை, கவிதைத் துறைகளுக்கும் இது பொருந்தும். ஆனால் ஒரு துறையில் பரிசு பெற்றவர் மற்ற துறைகளில் கலந்துகொள்ள முடியும்.

 

இதுவரை பரிசு பெற்றவர்கள்
ஆண்டு நூலின் தலைப்பு எழுத்தாளர் துறை
2010 புதிதாக இரண்டு முகங்கள் இந்திரஜித் சிறுகதை
2011 சங்கமம் முருகடியான் கவிதை
2012 கடல் கடந்த தமிழ்க் கலாசாரம் எஸ்.எஸ். சர்மா கட்டுரை
2013 ஒரு கோடி டாலர்கள மாதங்கி சிறுகதை
2014 காணாமல் போன கவிதைகள் நெப்போலியன் கவிதை
2015 பன்முக நோக்கில் சிங்கப்பூர்க் கவிதைகள் முனைவர் கோட்டி திருமுருகானந்தம கட்டுரை
2016 மூன்றாவது கை ஷாநவாஸ் சிறுகதை
2017 லீ குவான் இயூ பிள்ளைத் தமிழ் அ.கி.வரதராசன் கவிதை