முத்தமிழ் விழா 2016

Muththamizh Vizha 2016

இவ்வாண்டு முத்தமிழ் விழா கடந்த 17.04.16 அன்று உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

எழுத்தாளர் திருமதி கமலாதேவி அரவிந்தன் அவர்களுக்கு தமிழவேள் விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.

வழக்கம்போலவே பாலர் பள்ளி, தொடக்கநிலை 1 & 2 வகுப்புகளுக்கான மாறுவேடப் போட்டியின் இறுதிச் சுற்று அனைவரையும் கவர்ந்தது.

பாலர் பள்ளி முதல் தொடக்கக்கல்லூரி வரை வெற்றிபெற்ற மாணவர்களுக்கும் பொதுப் பிரிவில் குறுநாவல் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

பொதுப்பிரிவில் நடத்தப்பட்ட குறுநாவல் போட்டியில் வெற்றி பெற்றோர் விவரம்:

1. பிரேமா மகாலிங்கம் – இரட்டை வானவில் – முதல் பரிசு
2. வ. ஹேமலதா – வலை – இரண்டாம் பரிசு
3. கிருத்திகா – என்னை ஏன் தொலைத்தாய்? – மூன்றாம் பரிசு

முத்தமிழ் விழா 2015

Muththamizh Vizha Thamizhavel virudhu

இவ்வாண்டு முத்தமிழ் விழா கடந்த 11.4.2015 சனிக்கிழமை உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. கலாசார, சமூக, இளையர் துறை அமைச்சர் திரு.லாரன்ஸ் வோங் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றினார்.

ஆசிரியர் திரு. வி.ஆர்.பி. மாணிக்கத்திற்கு தமிழவேள் விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.

ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் திரு. ஸ்டாலின் குணசேகரன் “எழுச்சி தந்த எழுத்து” எனும் தலைப்பில் அருமையாக உரையாற்றி அனைவரையும் கவர்ந்தார்.

பாலர் பள்ளி, தொடக்கநிலை 1 & 2 வகுப்புகளுக்கான மாறுவேடப் போட்டியின் இறுதிச் சுற்று அனைவரையும் கவர்ந்த மற்றோர் அம்சம்.

வெற்றிபெற்ற மாணவர்களுக்கும் பொதுப் பிரிவில் சிறுகதை. கவிதைப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

ஸ்டாலின் குணசேகரன் சிறப்புரை காணொளி