முத்தமிழ் விழா சிறுகதைப் போட்டி 2021

பல்கலைக்கழக மாணவர் / இளையர் பிரிவு – பொதுப் பிரிவு

அனுப்ப வேண்டிய இறுதி நாள்: 15.03.2021

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் இந்த ஆண்டு முத்தமிழ் விழாவை வழக்கம்போல் நடத்தவிருக்கிறது. முத்தமிழ் விழாவை ஒட்டி ஆண்டுதோறும் பொதுமக்களுக்கு இலக்கியப் போட்டிகள் நடத்துவது வழக்கம். ஆகவே, இந்த ஆண்டும் வழக்கம்போல் சிறுகதைப் போட்டி நடத்தப்படும்.

அத்துடன் பல்கலைக்கழக மாணவர்களுக்குத் தனியாகச் சிறுகதைப் போட்டி நடத்தப்படும். சிங்கப்பூரில் உள்ள எந்தப் பல்கலைக்கழக மாணவரும் மற்றும் தொடக்கக் கல்லூரி, பலதுறைத் தொழிற் கல்லூரி நிலைக்கு மேலுள்ள கல்வி நிறுவன மாணவரும் இந்தச் சிறுகதைப் போட்டியில் கலந்து கொள்ளலாம்.

இந்த ஆண்டு பல்கலைக்கழக மாணவர்கள் பிரிவுப் போட்டி இளையர்களும் பங்குபெறும் வகையில் விரிவடைகிறது. 15.03.2021 நாளன்று 18 வயதிலிருந்து 25 வயது வரையிலான மாணவர் உள்ளிட்ட எந்தவொரு இளையரும் இப்போட்டியில் கலந்துகொள்ளலாம். 

 

பொதுப் பிரிவுசிறுகதைப் போட்டிப் பரிசுகள்

முதல் பரிசு $500; இரண்டாம் பரிசு $300; மூன்றாம் பரிசு $200. 3 ஊக்கப் பரிசுகள் ஒவ்வொன்றும் $100.

 

எழுத்துச் செம்மல் சே.வெ. சண்முகம்-ருக்குமணி அம்மாள் நினைவு சிறுகதைப் போட்டி: பல்கலைக்கழக மாணவர்கள் / இளையர் பிரிவுபரிசுகள்

SirMdm

முதல் பரிசு $300; இரண்டாம் பரிசு $250; மூன்றாம் பரிசு $200. 3 ஊக்கப் பரிசுகள் ஒவ்வொன்றும் $120.

சிறுகதைக்கான விதிகள்

கதைக் கரு எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் கதைகள் சிங்கப்பூர்ச் சூழலில், நடப்பதாக அமைந்திருக்க வேண்டும். பல்கலைக்கழக மாணவர்கள் எழுதும் கதைகள் 1,000 முதல் 1,200 வார்த்தைகளுக்குள்ளும் பொது மக்கள் எழுதும் கதைகள் 1,200 முதல் 1,500 வார்த்தைகளுக்குள்ளும் இருக்க வேண்டும். ஒருவர் அதிகபட்சமாக 3 கதைகள் அனுப்பலாம். ஒவ்வொரு கதைக்கும் அசல் ஒன்றுடன் மூன்று நகல்கள் (1+3) கட்டாயம் அனுப்ப வேண்டும். 4 பிரதிகள் இல்லாத கதைகள் நிராகரிக்கப்படும். கதைகளைக் கண்டிப்பாக மின்னஞ்சலில் அனுப்பக்கூடாது.

சிறுகதையில் எத்தனை வார்த்தைகள் உள்ளன என்று கதையின் இறுதியில் குறிப்பிட்டு அனுப்புதல் சிறப்பு.

சிறுகதைப் போட்டிகளுக்கான விதிகள்

  1. சிங்கப்பூர்க் குடியுரிமை பெற்றவர்களும் நிரந்தரவாசிகளும் மட்டுமே போட்டியில் பங்கேற்கலாம்.
  2. எழுத்தாளர் கழகச் செயற்குழு உறுப்பினர்களில் தலைவர், துணைத் தலைவர், செயலாளர், துணைச் செயலாளர், பொருளாளர் பதவிகளில் இருப்போர் போட்டிகளில் பங்கேற்க முடியாது. மற்ற செயலவை உறுப்பினர்கள் பங்கேற்கலாம். சிங்கப்பூர் எழுத்தாளர் கழக உறுப்பினர்களும் உறுப்பினர் அல்லாதவர்களும் பங்கேற்கலாம்.
  3. கதைகள் எழுதப்பட்டுள்ள தாள்களில் பெயரோ மற்ற விவரங்களோ எழுதக் கூடாது. பெயர், முகவரி, தொடர்பு எண், மின்னஞ்சல் முகவரி போன்றவற்றைத் தனித் தாளில் எழுதி கதையுடன் அனுப்ப வேண்டும்.
  4. படைப்புகளைக் கூடியவரை கணினியில் அச்சிட்டு அனுப்ப வேண்டும். எழுதி அனுப்பினால், கையெழுத்து புரியும்படி தெளிவாக இருக்க வேண்டும். அச்சிட்டாலும் எழுதினாலும் தாளின் ஒரு பக்கத்தில் மட்டுமே இருக்க வேண்டும். இரு பக்கங்களிலும் இருக்கக்கூடாது.
  5. சிறுகதை தன்னுடையதுதான் என்றும் வேறு எந்த ஊடகத்திலும் வெளியாகவில்லை என்றும் உறுதிக் கடிதம் இணைக்கப்பட வேண்டும்.
  6. அத்துடன் அக்கடிதத்திலேயே நீங்கள் சிங்கப்பூர்க் குடியுரிமை பெற்றவரா, நிரந்தரவாசியா, பல்கலைக்கழக / தேசியக் கல்விக் கழக மாணவரா என்பதையும் குறிப்பிட வேண்டும். அடையாள அட்டையின் நகலை அனுப்பவேண்டாம். ஆனால் அடையாள அட்டை எண்ணின் கடைசி நான்கு இலக்கங்களைக் (Last 4 digits including English alphabet) குறிப்பிட வேண்டும்.
  7. போட்டி குறித்த நடுவர்களின் முடிவே இறுதியானது.
  8. போட்டி முடிவுகள் 17-04-2021 அன்று நடக்க இருக்கும் முத்தமிழ் விழாவில் வெளியிடப்படும். இதற்கிடையே முடிவுகளைக் குறித்து எந்த விசாரணைகளுக்கும் பதில் இராது.

முத்தமிழ் விழா 2021 – சிறுகதைப் போட்டி” என்று தபால் உறையின் மேல் எழுதி, சிறுகதைகளை துணைத் தலைவரின் முகவரிக்கு அஞ்சல் வழி அனுப்பி வைக்க வேண்டும்.

Mr. Naa. Aandeappan
Blk 723, #13-149
Yishun St 71 760723
Singapore

நேரில் சிறுகதைகள் கொடுக்க விரும்புவோர் செயலாளர் திருமதி கிருத்திகாவைத் (HP: 9060 2644) தொடர்புகொள்ளவும்.

மேல் விவரங்களுக்கு செயலாளர் திருமதி கிருத்திகா (kiruthikavirku@gmail.com), துணைச் செயலாளர் திரு. கோ.இளங்கோவன் (HP: 91216494) அல்லது பொருளாளர் திரு. மாணிக்கம் கண்ணப்பன் (HP: 96382656) ஆகியோரைத் தொடர்பு கொள்ளலாம்.

 

முத்தமிழ் விழாப் போட்டிகளில் இதுவரை பரிசு பெற்றவர்கள்

ஆண்டு (போட்டி)

முதல் பரிசு

இரண்டாம் பரிசு

மூன்றாம் பரிசு

ஊக்கப் பரிசு

ஊக்கப் பரிசு

ஊக்கப் பரிசு

2012  (சிறுகதை)

நவமணி சுந்தரம்

வ. ஹேமலதா

கு.சீ. மலையரசி

பனசை நடராசன்

மாதங்கி

பானுமதி வெங்கட்ரமணி

2013  (சிறுகதை)

ரா. சோமசுந்தரம்

வ. ஹேமலதா

ரமா சுரேஷ்

ப. அழகுநிலா

விசயபாரதி இந்துமதி

இராமமூர்த்தி மகேஷ்குமார்

2014  (சிறுகதை)

விசயபாரதி இந்துமதி

வ. ஹேமலதா

பிரதீபா

ரா. சோமசுந்தரம்

தமிழ்ச்செல்வி

ப. அழகுநிலா

2015  (சிறுகதை)

மா. அன்பழகன்

பா. அழகுநிலா

சுஜா செல்லப்பன்

ரமா சுரேஷ்

கிருத்திகா சிதம்பரம்

வி. ஹேமலதா

2016  (குறுநாவல்)

பிரேமா மகாலிங்கம்

வ. ஹேமலதா

கிருத்திகா சிதம்பரம்

சுஜா செல்லப்பன்

மில்லத் அஹ்மத்

விசயபாரதி இந்துமதி

2017  (சிறுகதை)

பிரேமா மகாலிங்கம்

இரா. தமிழ்ச்செல்வி

கிருத்திகா சிதம்பரம்

அபிராமி சுரேஷ்

மில்லத் அஹ்மது

வ. ஹேமலதா

2018  (சிறுகதை)

மணிமாலா மதியழகன்

இ. கலைவாணி

சி. அரசு வித்யா சங்கரி

அழகு சுந்தரம்

மில்லத் அஹ்மது

சொக்கலிங்கம் அரவிந்த்

2018 (குழந்தைப் பாடல்)

தவமணி வேலாயுதம்

கோ. இளங்கோவன்

ப. அழகுநிலா

கணேசுகுமார் பொன்னழகு

மாசிலாமணி அன்பழகன்

சொக்கலிங்கம் அரவிந்த்

2019  (சிறுகதை)

மணிமாலா மதியழகன்

அபிராமி சுரேஷ்

மில்லத் அஹ்மது

இரா. தமிழ்ச்செல்வி

பிரேமா மகாலிங்கம்

கு.சீ. மலையரசி

2020  (மரபுக்கவிதை)

பிச்சினிக்காடு இளங்கோ

மாசிலாமணி அன்பழகன்

பொன். கணேஷ்குமார்

தவமணி வேலாயுதம்

மில்லத் அஹ்மது

சுபாஷினி

2020  (சிறுகதை)

அபிராமி குணசேகரன்

மில்லத் அஹ்மது

மணிமாலா மதியழகன்

வித்யா அருண்

ரெ. விஜயலெட்சுமி

சிவக்குமார் KB