சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் முத்தமிழ் விழா 2018 போட்டிகள்

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் தனது முத்தமிழ் விழாவை வரும் ஏப்ரல் மாதம் நடைபெறும் தமிழ் விழாவின் ஒரு பகுதியாக இவ்வாண்டும் நடத்தவிருக்கிறது. ஏப்ரல் மாதம் 7ஆம் தேதி சனிக்கிழமை முத்தமிழ் விழா நடைபெறும். முத்தமிழ் விழாவை ஒட்டி ஆண்டுதோறும் பொதுமக்களுக்கு இலக்கியப் போட்டிகள் நடத்துவது வழக்கம். ஆகவே இவ்வாண்டு இரண்டு போட்டிகளை நடத்தவிருக்கிறோம். ஒன்று சிறுகதைப் போட்டி; மற்றொன்று குழந்தைப் பாடல்கள் போட்டி.

 பரிசுகள் – சிறுகதை 

முதல் பரிசு $500; 2ஆம் பரிசு $300; 3ஆம் பரிசு $200. 3 ஊக்கப் பரிசுகள் ஒவ்வொன்றும் $100.

குழந்தைப் பாடல்கள்

முதல் பரிசு $300; 2ஆம் பரிசு $200; 3ஆம் பரிசு $100. 3 ஊக்கப் பரிசுகள் ஒவ்வொன்றும் $75.

சிறுகதைக்கான விதிகள்

கதைக் கரு எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் கதைகள் சிங்கப்பூர்ச் சூழலில், நடப்பதாக அமைந்திருக்க வேண்டும். கதைகள் 1,200 வார்த்தைகளுக்குக் குறையாமலும் 1,500 வார்த்தைகளுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். ஒருவர் அதிகபட்சமாக 3 கதைகள் அனுப்பலாம். ஒவ்வொரு கதைக்கும் அசல் ஒன்றுடன் மூன்று நகல்கள் (1+3) கட்டாயம் அனுப்ப வேண்டும். 4 பிரதிகள் இல்லாத கதைகள் நிராகரிக்கப்படும்.

குழந்தைப் பாடல்களுக்கான விதிகள்

பாடல்கள்கைவீசம்மா கைவீசு, கடைக்குப் போகலாம் கைவீசு”, “சாய்ந்தாடம்மா சாய்ந்தாடுஎன்பன போன்று ஆங்கிலத்தில் ரைம்ஸ் என்று சொல்வார்களே அதுபோல் இருக்க வேண்டும். ஒவ்வொரு பாடலும் 8 முதல் 10 அடிகளுக்குள் இருக்க வேண்டும். ஒவ்வொருவரும் அதுபோல் 5 பாடல்களை அனுப்ப வேண்டும். ஒவ்வொரு பாடலுக்கும் அசல் ஒன்றுடன் மூன்று நகல்கள் (1+3) கட்டாயம் அனுப்ப வேண்டும். ஆக 5 பாடல்களுக்கும் மொத்தம் 15 பிரதிகள் அனுப்ப வேண்டும். அந்த 5 பாடல்களின் அடிப்படையில் பரிசுக்குரியவர்கள் தெரிவு செய்யப்படுவர். இந்தப் பாடல்களைப் பின்னர் இசைவட்டாக வெளியிடும் திட்டமும் உண்டு.

பொதுவான விதிகள்

  1. சிங்கப்பூர்க் குடியுரிமை பெற்றவர்களும் நிரந்தரவாசிகளும் மட்டுமே போட்டியில் பங்கேற்கலாம்.
  2. எழுத்தாளர் கழகச் செயற்குழு உறுப்பினர்களில் தலைவர், துணைத் தலைவர், செயலாளர், துணைச் செயலாளர், பொருளாளர் பதவிகளில் இருப்போர் மட்டும் போட்டியில் பங்கேற்க முடியாது. மற்ற செயலவை உறுப்பினர்கள் பங்கேற்கலாம்.
  3. கதைகளும் பாடல்களும் எழுதப்பட்டுள்ள தாள்களில் பெயரோ மற்ற விவரங்களோ எழுதக் கூடாது. பெயர், முகவரி, அடையாள அட்டை எண், தொடர்பு எண்கள் போன்றவற்றைத் தனித் தாளில் எழுதி கதையுடன் அனுப்ப வேண்டும்.
  4. அத்துடன் அடையாள அட்டையின் இருபக்க நகலும் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். அந்த விவரங்கள் இல்லாத படைப்புகள் போட்டியில் சேர்த்துக்கொள்ளப்பட மாட்டா.
  5. படைப்புகளைக் கூடியவரை கணினியில் அச்சிட்டு அனுப்ப வேண்டும். எழுதி அனுப்பினால் கையெழுத்து, புரியும்படி தெளிவாக இருக்க வேண்டும். அச்சிட்டாலும் எழுதினாலும் தாளின் ஒரு பக்கத்தில் மட்டுமே இருக்க வேண்டும். இரு பக்கங்களிலும் இருக்கக்கூடாது.
  6. சிறுகதையோ பாடல்களோ தன்னுடையதுதான் என்றும் வேறு எந்த ஊடகத்திலும் வெளியாகவில்லை என்றும் உறுதிக் கடிதம் இணைக்கப்பட வேண்டும்.
  7. போட்டி குறித்த நடுவர்களின் முடிவே இறுதியானது.

சிறுகதைகளையும் பாடல்களையும் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம், BLK 723 # 13-149,Yishun Street 71, Singapore 760723 எனும் முகவரிக்கு 28.02.2018க்குள் வந்து கிடைக்கும்படி அனுப்ப வேண்டும். மேல் விவரங்களுக்கு சுப. அருணாசலம் 93221138; கிருத்திகா 90602644, ஆகியோரைத் தொடர்பு கொள்ளலாம்.

 

மாணவர் போட்டிகள் பற்றிய விவரங்களுக்கு இங்கே தட்டவும்.

 

சிறுகதைப் போட்டியில் இதுவரை பரிசு பெற்றவர்கள்

ஆண்டு

முதல் பரிசு

இரண்டாம் பரிசு

மூன்றாம் பரிசு

ஊக்கப் பரிசு

ஊக்கப் பரிசு

ஊக்கப் பரிசு

2012

நவமணி சுந்தரம்

வ. ஹேமலதா

கு.சீ. மலையரசி

பனசை நடராசன்

மாதங்கி

பானுமதி வெங்கட்ரமணி

2013

ரா. சோமசுந்தரம்

வ. ஹேமலதா

ரமா சுரேஷ்

ப. அழகுநிலா

விசயபாரதி இந்துமதி

இராமமூர்த்தி மகேஷ்குமார்

2014

விசயபாரதி இந்துமதி

வ. ஹேமலதா

திருமதி பிரதீபா

ரா. சோமசுந்தரம்

திருமதி தமிழ்ச்செல்வி

திருமதி ப. அழகுநிலா

2015

மா. அன்பழகன்

பா. அழகுநிலா

சுஜா செல்லப்பன்

ரமா சுரேஷ்

கிருத்திகா சிதம்பரம்

வி. ஹேமலதா

2016  (குறுநாவல் போட்டி)

பிரேமா மகாலிங்கம்

வ. ஹேமலதா

கிருத்திகா சிதம்பரம்

சுஜா செல்லப்பன்

மில்லத் அஹ்மத்

விசயபாரதி இந்துமதி

2017

பிரேமா மகாலிங்கம்

இரா. தமிழ்ச்செல்வி

கிருத்திகா சிதம்பரம்

அபிராமி சுரேஷ்

மில்லத் அஹ்மத்

வ. ஹேமலதா