செயலவை (2015-2017)

எழுத்தாளர் கழகச் செயலவை

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் செயலவையில் மூன்று புதியவர்கள் இணைந்துள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை சிண்டா அரங்கில் நடைபெற்ற ஈராண்டுப் பொதுக்கூட்டத்தில் புதிய செயலவை போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டது.

திரு. நா. ஆண்டியப்பன் தலைவராகவும் திரு. இரா. துரைமாணிக்கம் துணைத் தலைவராகவும் திரு. சுப. அருணாசலம் செயலாளராகவும் திரு. இராம. வயிரவன் துணைச் செயலாளராகவும் மீண்டும் தேர்வு பெற்றனர். புதிய பொருளாளராக திரு. க. செல்வம் பொறுப்பேற்றார். திரு.சு.முத்துமாணிக்கம், திரு. கோ. இளங்கோவன், முனைவர் கௌசல்யா ஆகிய மூவரும் செயலவை உறுப்பினர்களாகத் தேர்வு பெற்றனர். இவர்கள் ஏற்கனவே இருந்த செயலவையில் இடம்பெற்றிருந்தனர். திருமதி மாதங்கி, திரு. அழகுசுந்தரம், திருமதி கிருத்திகா ஆகிய மூவருமே புதிய உறுப்பினர்கள். இவர்களில் திருமதி மாதங்கி சில ஆண்டுகளுக்குமுன் செயலவையில் இடம்பெற்றிருந்து பின்னர் பிள்ளைகளின் படிப்புக் காரணமாக விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆண்டுக் கூட்டத்தில் கலந்துகொண்ட உறுப்பினர்கள் பல்வேறு பிரச்சினைகள் பற்றிக் கருத்துத் தெரிவித்தனர். குறிப்பாகச் சிங்கப்பூர்ப் பள்ளிகளின் மாணவர்களை இன்னும் பரவலாகச் சென்றடையும் வகையில் போட்டிகளை நடத்த வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

இறுதியில் பேசிய தலைவர் திரு. நா. ஆண்டியப்பன் அடுத்த ஆண்டு எழுத்தாளர் கழகத்தின் 40ஆம் ஆண்டுவிழா என்றும் அதனைச் சிறப்பாகக் கொண்டாட ஏற்பாடு செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.

காலை மணி 10.30க்குத் தொடங்கிய கூட்டம் 12.30க்கு நிறைவடைந்த பிறகு அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.

முன்னதாக ஆண்டுக் கூட்டம் தொடங்குவதற்குமுன் சிண்டாவின் அதிகாரி ஒருவர் அதன் திட்டங்கள் குறித்து உறுப்பினர்களுக்கு விளக்கினார்.

exco 2015

படவிளக்கம்: (அமர்ந்திருப்போர்) இராம. வயிரவன், சுப. அருணாசலம், நா. ஆண்டியப்பன், க. செல்வம். (நிற்போர்) கோ. இளங்கோவன், முனைவர் கௌசல்யா, மாதங்கி, கிருத்திகா, சு.முத்துமாணிக்கம், அழகு சுந்தரம். துணைத் தலைவர் குழு புகைப்படத்தில் இல்லை