கதைக்களம்

சிறுகதை எழுத்தாற்றலை வளர்க்கும் போட்டிகள்

kathaikalamzoombanner
நவம்பர் மாதக் கதைக்களம்

நாள்07.2.2021  ஞாயிறு பிற்பகல் 4:00 – 6:00 மணி  ‘யூடியூப்’ ஒளிவழி

போட்டிகளுக்குப் படைப்புகளை அனுப்ப வேண்டிய கடைசி நாள்: 29.01.2021 வெள்ளிக்கிழமை

சிறுகதைப் போட்டி துவக்க வரி:

மாணவர் பிரிவு: “’அப்பா, அப்பா, யார் வந்திருக்கிறார்கள் என்று வந்து பாருங்கள்!”

பொதுப்பிரிவு: “அவள் வருவாளா, மாட்டாளா என்ற கேள்வியோடு வழக்கமாகச் சந்திக்கும் வணிக வளாகத்தில் தவிப்போடு காத்திருந்தேன்.”

சிறுகதை விமர்சனம் – குறிப்புகளை இங்கே பதிவிறக்கம் செய்யலாம் 

விளக்கக் காணொளிகளை பகுதி என்பதைத் தட்டினால் காணலாம் – பகுதி 1       பகுதி 2     பகுதி 10-1       பகுதி 10-2     பகுதி 10-3

சொல்வளம்: மறந்த மறைந்த வார்த்தைகள்

ஒற்றுப்பிழை இல்லாமல் சிறுகதை எழுத:

வலி மிகும் – பாகம் 1

வலி மிகா பாகம் 2

வல்லொற்று மிகுமா? மிகாதா?

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் தேசிய நூலக வாரியத்துடன்  இணைந்து படைக்கும் கதைக்களம், மே 2013-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. கதைக்களத்தில் சிறுகதை குறித்து ஒரு  சிறப்புரை இருக்கும்.

மேல்விவரங்களை kiruthikavirku@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பி திருமதி கிருத்திகாவிடம் கேட்கலாம்.

சிறுகதை மற்றும் சிறுகதை விமர்சன போட்டியில் அனைவரும் கலந்துகொள்ள வரவேற்கப்படுகிறார்கள்.

  • இரண்டு போட்டிகளுக்கும் ரொக்கப் பரிசுடன் புத்தகப் பரிசும் வழங்கப்படும்.
  • ஒருவர் ஒரே பிரிவில் 3 படைப்புகள் வரை அனுப்பலாம்.
  • நிகழ்ச்சியில் கலந்துகொள்பவர்கள் மட்டுமே பரிசுகளைப் பெறும் தகுதி பெறுவர்.
  • Word document format – இல் அச்சிட்டு மின்னியல் படிவம்  http://singaporetamilwriters.com/kkcontest வழி படைப்புகளை அனுப்பவேண்டியது அவசியம்.
  • கீழே விவரித்து உள்ளபடி filename இருத்தல் சிறப்பு
  • சிங்கப்பூர் அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் மட்டுமே பங்கு பெற முடியும்.

நிகழ்ச்சியில் பங்கேற்பதன் மூலம் சிறுகதை எழுதும் உங்கள் ஆற்றலை வளர்த்துக் கொள்ள முடியும். மற்ற எழுத்தாளர்களைச் சந்தித்து உரையாடும் வாய்ப்பும் கிடைக்கும்.

சிறுகதைப் போட்டி – மாணவர் பிரிவு:

‘கதைக்களம்’ போட்டிக்கு உங்களுடைய சிறுகதைகளை அனுப்பும்பொழுது கதைச் சூழல் சிங்கப்பூர்ச் சூழ்நிலையில் இருந்து முற்றிலும் விலகாமல் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும்.  சிறுகதைப் போட்டியில் இரண்டு பிரிவுகள் உண்டு.

மாணவர் பிரிவுக்குத் தொடக்கக் கல்லூரி, பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவர்கள் வரை எழுதலாம். ஒவ்வொரு மாதமும் சிறுகதைப் போட்டிக்கான தொடக்கவரி மாணவர் பிரிவிற்குக் கொடுக்கப்படும்.  இந்தத் தொடக்கவரியில் ஆரம்பித்து சிறுகதைகளை எழுதி அனுப்ப வேண்டும். சிங்கப்பூரில் படிக்கும் மாணவர்கள்  மட்டுமே போட்டியில் பங்கு பெற முடியும்.

மாணவர் பிரிவுக்கு 200 முதல் 300 வார்த்தைகளுக்குள் படைப்புகள் இருக்கவேண்டும்.

ஐந்திற்கும் மேற்பட்ட படைப்புகள் வந்தால், அவற்றில்  சிறந்த கதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு மாணவர்களுக்கு  மூன்று ரொக்கப் பரிசுகள் வழங்கப்படும்.

Student_<Story Name in English>_MONTHYEAR_KK.doc என்று பெயரிட்டு கதை அனுப்பவேண்டும். உதாரணம்: மார்ச் மாதப் போட்டிக்கு ’என் நண்பன்’ என்ற தலைப்பில் சிறுகதை எழுதினால், filename = Student_En Nanban_Mar18_KK.doc

முதல் பரிசு

இரண்டாம் பரிசு

மூன்றாம் பரிசு

30 வெள்ளி

20 வெள்ளி

10 வெள்ளி

சிறுகதைப் போட்டி – பொதுப் பிரிவு

பொதுப் பிரிவில் அனைவரும் கலந்துகொள்ளலாம். பொதுப்பிரிவில் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் தங்களுக்குப் பிடித்த வரியுடன் சிறுகதை எழுதலாம் அல்லது கொடுக்கப்பட்டுள்ள தொடக்கவரியில் ஆரம்பித்தும் எழுதலாம்.

பொதுப் பிரிவுக்கு 400 முதல் 500 வார்த்தைகளுக்குள் படைப்புகள் இருக்கவேண்டும்.

போட்டிக்கு வரும் கதைகளில் சிறந்த கதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு மூன்று ரொக்கப் பரிசுகள் வழங்கப்படும்.

SS_ஆங்கிலத்தில் கதையின்பெயர்_MONTHYEAR_KK.doc என்று பெயரிட்டு கதை அனுப்பவேண்டும். உதாரணம்: மார்ச் மாதப் போட்டிக்கு ’தேடல்’ என்ற தலைப்பில் சிறுகதை எழுதினால், filename = SS_Thedal_Mar18_KK.doc

முதல் பரிசு

இரண்டாம் பரிசு

மூன்றாம் பரிசு

60 வெள்ளி

40 வெள்ளி

30 வெள்ளி

 

சிறுகதை விமர்சனப் போட்டி:

நீங்கள் படித்த ஒரு சிறுகதையைப் பற்றி விமர்சனம் எழுதி அனுப்ப வேண்டு. போட்டிக்கு வரும் விமர்சனங்களில் சிறந்தவையாக இரண்டு தேர்வு செய்யப்பட்டு ரொக்கப் பரிசுகள் வழங்கப்படும்.

முதல் பரிசு

இரண்டாம் பரிசு

50 வெள்ளி

30 வெள்ளி

Review_ஆங்கிலத்தில் கதையின்பெயர்_MONTHYEAR_KK.doc என்று பெயரிட்டு கதை விமர்சனங்களை அனுப்பவேண்டும். உதாரணம்: Review_Asara Marangal_Mar18_KK

பொதுப் பிரிவில் 250 முதல் 300 வார்த்தைகளுக்குள் படைப்புகள் இருக்கவேண்டும்.

விமர்சனம் எழுதிய மூலக்கதையையும் உடன் அனுப்பினால் சிறப்பு. Filename இப்படி இருக்கவேண்டும். Original_StoryName.doc

மேல்விவரங்களுக்கு: kiruthikavirku@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் சி.த.எ.க. செயலாளர் திருமதி கிருத்திகாவைத் தொடர்புகொள்ளலாம்.

இலவசமாக நடத்தப்படும் கதைக்களம் நிகழச்சியில் கலந்துகொள்ள பொதுமக்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் என அனைவரும் வரவேற்கப்படுகிறார்கள்.