நீங்கள் தமிழ் எழுத்தாளரா ?

நீங்கள் தமிழில் கதைகள் கட்டுரைகள் நாவல்கள் எழுதியிருக்கிறீர்களா?

உங்கள் படைப்புகள் மாத, வார, தினசரி இதழ்களில் வெளியாகியுள்ளனவா?

உங்களுடைய படைப்புகளை நூலாக வெளியிட்டிருக்கிறீர்களா?

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் உங்களைப் பற்றிய விபரங்களைச் சேகரித்து தனது இணையப் பக்கத்தில் வெளியிடவும், பின்னாளில் சிங்கப்பூர் எழுத்தாளர்களைப் பற்றிய விவரங்கள் அடக்கிய கையேடு வெளியிடும்போது அதில் இடம்பெறச் செய்யவும் விரும்புகிறது. இணையப்பக்கத்தில் உங்கள் பெயர் விபரங்கள் இடம்பெற்றால் உலகெங்கிலும் உள்ள தமிழ் எழுத்தாளர்களும், தமிழன்பர்களும் உங்களைத் தொடர்பு கொள்ள ஒரு வாய்ப்பு உருவாகும்.

http://www.singaporetamilwriters.com/index.php/sgwriterdirectory என்ற இணையப் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள படிவத்தை அச்சிட்டு கேட்கப்பட்டுள்ள விவரங்களைப் பூர்த்தி செய்து கூடவே உங்கள் சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படமும், உங்களுடைய அடையாள அட்டையின் (நீலம்/சிவப்பு) பிரதியும் இணைத்து, வரும் ஆகஸ்டு 15 தேதிக்கு முன்னதாகக் கிடைக்கும்படி படிவத்தில் தரப்பட்டுள்ள தொடர்பு முகவரிக்கு அனுப்பி வைக்கவும். கூடுதலாக, கீழ்காணும் விவரங்களை திரு செல்வம் கண்ணப்பன் அவர்களுக்கு மின்னஞ்சல் selvamk@live.com.sg மூலம் முகவரிக்கு அனுப்பிவைக்கவும்.

* புனைப்பெயர், எழுதிவரும் ஆண்டுகள், வெளிவந்த இதழ்களின் பெயர்கள், எழுதி வெளியிட்டுள்ள நூல்களின் எண்ணிக்கை & விவரங்கள், பெற்ற விருதுகள் / பரிசுகள், பிற இலக்கியப் பணிகள் / பொறுப்புகள், உங்களைப் பற்றி (ஐம்பது சொற்களுக்கு மிகாமல்)
ஏற்றுக்கொள்ளப்பட்டால் இந்த விவரங்கள் கழகத்தின் இணையப் பக்கத்திலோ அல்லது சிங்கப்பூர் எழுத்தாளர்களைப் பற்றிய விவரக்கையேட்டிலோ அல்லது இரண்டிலுமோ இடம்பெறும்.

மேலதிக விவரங்களுக்கு செல்வம் கண்ணப்பன் 97306174 மற்றும் இராம வயிரவன் 93860497 தொடர்பு கொள்ளவும்
படிவத்தைப் பெற selvamk@live.com.sg என்ற மின்னஞ்சலுக்கு எழுதிப் பெறவும்.

fortyan