2ஆம் உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாடு

 header

அழைப்பிதழ் – நிகழ்ச்சி நிரல்

2ஆம் உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாடு கட்டுரை அனுப்பும் தேதி நீட்டிப்பு

சென்னையில் வரும் ஜூன் மாதம் நடைபெறவிருக்கும் 2ஆம் உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டிற்கும் மலருக்கும் கட்டுரை அனுப்புவதற்கான தேதி ஏப்ரல் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனை மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். இதற்குமுன் அந்தத் தேதி 15.04.2017 என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

2ஆம் உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாடு வரும் ஜூன் மாதம் 9, 10, 11 தேதிகளில் சென்னையில் நடைபெற இருக்கிறது.

மாநாட்டில் பங்குபெற விரும்புவோர் அதற்குரிய படிவத்தை நிரப்பி உடனடியாக மாநாட்டின் சிங்கப்பூர் ஒருங்கிணைப்பாளர் திரு. சுப. அருணாசலத்திற்கு (93221138 – subaaruna98@gmail.com) அனுப்பி வைக்க வேண்டும். படிவத்தைப் பதிவிறக்கம் செய்ய www.singaporetamilwriters.com; www.wtwc2.com ஆகிய இணையத்தளங்களை நாடலாம்.

எழுத்தாளர் கழகக் குழு ஜூன் மாதம் 8ஆம் தேதி காலையில் இங்கிருந்து புறப்பட்டுச் செல்லத் திட்டமிட்டுள்ளது. 12 அல்லது 13ஆம் தேதி திரும்பலாம். அக்குழுவுடன் செல்ல விரும்புவோர் தங்கள் கடப்பிதழ் நகல்களை அனுப்பி வைப்பதுடன் தாங்கள் திரும்பி வரும் தேதியையும் தெரிவிக்க வேண்டும். அதற்கேற்றபடி விமானப் பயணச்சீட்டு ஏற்பாடு செய்யப்படும்.  தங்களுக்குத் தங்குமிடம் தேவையா என்பதையும் தெரிவிக்க வேண்டும். தேவையெனில் அதை எழுத்தாளர் கழகம் ஏற்பாடு செய்து தரும்.

இந்த விவரங்களை எல்லாம் வரும் 22.04.2017ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டுகிறோம்.

 

மாநாட்டு விவரங்கள் மற்றும் அழைப்பிதழுக்கு இங்கே தட்டவும்

brochure

சிங்கப்பூரிலிருந்து மாநாட்டில் கலந்துகொள்வதற்கான பதிவுப் படிவம்

wtwc_regn

மாநாட்டு மலரில் விளம்பரம் செய்வதற்கான படிவம்

wtwc_advt

மாநாட்டில் படைக்கும் கட்டுரைகளுக்கான தலைப்புகள்

Titles