கதைக்களம் – பல்கலைக்கழக மாணவர் சிறுகதைகள்

ஜூலை 2018 – பரிசு பெற்ற கதைகள்

நான்யாங் பல்கலைக்கழக மாணவர்கள் (NTU)

அவன்

ஒரு மணி நேரம் கழித்தும் அவர்களின் முறை வரவில்லை.  தீபாவுக்கு இதற்கு மேல் காத்துக்கொண்டிருக்க முடியவில்லை. அவள் எழுந்து வரவேற்பாளரிடம் சென்று என்ன நடக்கிறது என கேட்க முடிவெடுத்தாள். அவளின் அவசரத்தை புரிந்துக்கொண்ட சக்தி அவளைச் சமாதானப்படுத்தி உட்கார கூறினான். அத்தருணத்தில் தாதியர் ஒருவர் தீபாவையும் சக்தியையும் உள்ளே அழைத்தார்.

ஓரு சிறிய அறையினுள் இருவரும் நுழைந்தனர். மருத்துவர் இருவரையும் சிரித்த முகத்துடன் வரவேற்றார்.

“வணக்கம் தீபா! உங்கள் மருத்துவ பரிசோதனையின் முடிவுகளைப் பார்த்தேன். கவலைப்படும் படி எதுவும் இல்லை!” என்று அவர் தீபாவுக்கு உறுதி அளித்தார்.

“நன்றி டாக்டர். அப்போ நான் கிளம்பளாமா?” என்று தீபா கூறியபடி அவசரஅவசரமாக எழுந்தாள்.

“என்னமா? அப்படி என்ன அவசரம்? பிரச்சனை ஒன்றும் இல்லை. You’re pregnant!” என்று விவரித்தார் மருத்துவர்.

தீபாவின் அருகே அமர்ந்திருந்த சக்தி அவளை கட்டி அணைத்தான். இதெல்லாம் நடந்துகொண்டிருந்தபோது, ஒன்றும்

பேசாமல் தீபா திகைத்திருந்தாள்.

தீபாவின் முகத்தைப் பார்த்த மருத்துவர், “எதாவது பிரச்சனை?” என்று வினவினார்.

“ஒன்றும் இல்லை!” என்று அவள் பதிலளித்தாள். அதற்கு பிறகு மருத்துவர் கூறிய எல்லாவற்றும் அவளால் ஜீரணிக்க முடியவில்லை. அவர் கூறிய விவரங்கள் எல்லாவற்றும் செவிடர் காதில் சங்கு ஊதியது போல் இருந்தது.

இந்த சந்தோஷ தருணத்தைக் கொண்டாட சக்தி தீபாவை அவர்கள் இருவரும் அடிக்கடி செல்லும் உணவகத்திற்கு அழைத்து சென்றான்.

“தீபா, என்ன ஆச்சி? ஏன் இப்படி பேய் அடஞ்ச மாதிரி இருக்கெ?” என்று சக்தி அவள் கரங்களை பிடித்துக்கொண்டு கேட்டான்.

தீபா ஒன்றும் கூறாமல் அவள் கைத்தொலைபேசியில் மூழ்கினாள்.

“என்னமா? சொல்லு!”

“நான் ஒரு அம்மாவாக தயாராக இல்லை.”

“தீபா!”

“கத்தாத சக்தி!”

“என்ன தீபா இவ்வளவு சர்வ சதாரணமாக சொல்ர? நம்ம இதை பற்றி எத்தனை வாட்டி பேசிருக்கோம்! இப்ப வந்து பிள்ளை வேண்டாம்னு உளருரே?”

தீபா பெரு மூச்சிட்டாள்.

“இப்போதான் எனக்கு பிடித்த வேளையொன்றில் சேர்ந்துள்ளேன். அதற்குள்…” என்று தீபா தயக்கத்துடன் கூறினாள்.

“இவ்வளவு சயநல..” என்று கோபத்துடன் சக்தி குரலை உயர்த்தினான்.

“போதும் சக்தி! இதற்கு மேல் உனக்கிட பேசவதில் எந்த புன்னியமும் இல்லை!” என கூறினாள்.

தங்கள் இருவருக்குமே சிறுது இடைவேளி தேவை என அவள் சோகத்தோடு உணர்ந்தாள்.

அங்கிருந்து அவள் எழுந்து சென்றாள்.

இச்சம்பவத்தைக் கண்டு ஒரு வயதான பெண்மணி சக்தியை நோக்கி வந்தார்.

“உங்கள் இருவரையும் இங்கே அடிக்கடி பார்த்திருக்கிறேன்” என்று சக்தியிடம் அவர் கூறினார்.

தன் கோபத்தையும் தவிப்பையும் மறைக்க முயற்சி செய்துக்கொண்டு அப்பெண்மணியைக் கண்டு அவன் ஒரு புன்முறுவலிட்டான்.

“உங்க இருவரையும் பார்க்கும்போது சிறுவயதியில் என்னையும் என் கணவரையும் பார்ப்பதுபோல் இருக்கிறது. என் குடும்பத்தையும் என் வியாபாரத்தையும் எப்படி சமாளிக்கிறேன் என்று பலர் கேட்டுள்ளனர். இன்று நான் உணவகத்துறையில் இவ்வளவு சாதித்திருக்கிறன் என்றால் அது என்னால் மட்டுமள்ள என் கணவரின் ஆதரவினாலும் தான்!” என்று அவர் கூறினார்.

அதைக் கேட்ட சக்திக்கு ஒரு யோசனைத் தோன்றியது.

” ரோம்ப நன்றி, மேடம்!” என்று கூறிக்கொண்டே உணவகத்தை விட்டு அறக்க பறக்க சென்றான்.

வீட்டுக்குச் சென்றுக்கொண்டிருந்தபோது அப்பெண்மணி கூறியதைப்பற்றி நினைத்துக்கொண்டே சென்றான். எப்படி தீபாவின் மனதை மாற்ற வேண்டும் என அவனுக்கு தெரிந்தது.

படிப்பறையில் அவள் ஒரு புத்தகத்தை படித்துக்கொண்டிருந்தாள்.

அவளருகே அவன் அமர்ந்தான்.

தீபா இருக்கையிலிருந்து எழுந்தாள்.

“நான் வீட்டிலிருந்து குழந்தையைப் பார்த்துக்கொள்கிறேன்!” என்று சக்தி கூறினான்.

தீபா கேட்டதை நம்ப முடியாமல் சக்தியின் பக்கம் திரும்பினாள்.

“உனக்கு இது விளையாட்டாக தெரிதா? நான் வேளைக்கு சென்று நீ வீட்டில் இருந்தா எல்லாரும் என்ன சொல்வாங்க?” என்று பதற்றமும் கோபமும் கலந்த குரலில் கேட்டாள்.

“தீபா, நம் இருவருக்கும் தெரியும் இது எவ்வளவு பெரிய விஷயம் என்று. உனக்கும் இக்குழந்தை வேண்டும் என்று எனக்கு தெரியும்! மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று இன்று நாம் கவலைப்பட்டால், நாளை நாம் தான் கவலைப்படுவோம்!” என்றவன் ஆறுதல் கூறினான்.

“ஆனால்…..”

“ஆனால் என்ன? இது நம்மிருவரும் நம் பிள்ளைக்காக எடுத்த முடிவு. It’s common now, babe! கவலைப்படாதே! இந்த பயணத்தில் நம் இருவரும் பயணிக்கிறோம்.”

தீபா கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்து சக்தியைக் கட்டி அணைத்தாள்.

 

அவர்களுக்காக

அவள் செய்வது தவறு என்று அவளது மூளை நன்கு அறியும்; ஆனால் இதை விட சிறந்த வழி வேறெதுவும் இல்லை என்று அவளது இதயம் அவளை சமாதானப்படுத்தியது.
விழிகளிருந்தும் கண்ணீர் நீருற்றி போல வழிந்தோட, அவள் சமையலறைக்கு சென்றாள்.

அழுது அழுது அவளது உடம்பில் சக்தி இல்லாமல் போய்விட்டது. இருப்பினும், அவளது இதயமும் மூளையும் மேலும் சண்டையிட்டன; போரடியான. தனது முடிவை தான் மாற்றிக்கொள்வோமோ என்ற பீதி ஒரு பக்கமும், முடிவை எப்படியாவது மாற்றிக்கொள்ள வேண்டும் என்ற விருப்பம் ஒரு பக்கமுடனும் அவள் தள்ளாடினாள். கண்ணீர் துளிகளோடு சேர்ந்து வியர்வை மொட்டுகளும் வழிந்தோடியன. விழிகளை இறுக்கமாக மூடிக்கொண்டாள்; இந்த நிலமைக்கு தனதை ஆளாக்கிய சம்பவங்களை தனது  மூடிய  விழிகளில் கண்டாள்……..

கிருஷ்ணா, அவளின் தந்தை. ராதா, அவளது தாய். பெயர் பொருத்தத்தைவிட, ஜோடி பொருத்தம் அற்புதமாக இருக்கிறது என்று ஊரை கூறும்; அவைளும் கண்முடித்தனமாக கருதினாள்.

எவ்வளவு காதல் பறவைகள் இருந்தாலும் அவள் ரசித்தது அவளின் பெற்றோர்களைத்தான். அவ்விருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து நடந்துக்கொள்வதை அவள் ரசித்தாள்; எப்படி ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுக்காமல் ஆதரவாக இருந்தனர் என்பதையும் கண்டு  பூரிப்பு அடைவாள். இவ்வாறு அன்போடு கலந்த அவளது குடும்பம் சண்டையும் சச்சரவும் கலந்த உறவுகளாக மாறிவருவதை அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

வேடிக்கையாக தங்களுக்குள்ளை  குட்டியான  சண்டையிட்ட அவளது பெற்றோர்கள், பெரிதான சண்டையில் ஈடுபட்டன; சண்டை வன்முறையிலும் முடிகிறது. இவையெல்லாம் பிரம்மையாக இர்ருக்கக்கூடாதா என்று அவள் ஏங்காத நொடிகளை இல்லை. மனதளவில் பிரிந்துகொண்ட பெற்றோர்களை சேர்த்து கோர்க்க வேண்டும் என்பதில் அவள் உறுதியாக இருந்தாள். அலறினாள்; கதறினாள்; எதுவும் வேலைக்காகவில்லை.

நாட்கள் கடந்தோடின; சண்டையும் விரைவாக வளர்ந்தன. என்ன செய்வது எது செய்வது என்று அறியாமல் அவள் தத்தளித்த போது பெற்றோர்கள் விவாகரத்திற்கு ஏற்பாடு செய்த்தனர்.விவாகத்தில் மலர்ந்த உறவு விவாதத்தால் விவாகரத்தில் முடிகிறதை அவளால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. ஏதாவது செய்து விவாகரத்தை தடுக்க வேண்டும் என்று அவள் கிளர்ச்சிகரமாக அலைந்தாள்.

வேதனையோடு அலைந்த அவளை சூழ்நிலை  தீவிர முடிவிற்கு அழைத்துச்சென்றது. என்கே தனக்கு காயம் ஏற்பட்டால் அவளை குணமாக்கும் முயற்சியில் பெற்றோர்கள் கை சேர்ப்பனர் என்று அவள் நம்பினாள்.

தனது முடிவில் வலுவாக இருந்தவாறு, விழிகளை திறந்து, தென்பட் ட கத்தியை எடுத்து மணிக்கட்டையை அருத்தினாள். ஆழ்ந்த வலியை அவள் உணர்ந்தாள். வலியைவிட, இதனால் பெற்றோர்கள் சேர்வார்கள் என்ற ஆறுதல் அதிகமாக இருந்தவாறு மயங்கி விழுந்தாள்.

கண்விழித்துப்பார்த்தாள். மருத்துவமனையில் தனக்கு முன்னாடி பெற்றோர்கள் அழுதுகொண்டிருந்தன. தான் கண்விழித்ததை அறிந்துக்கொண்ட பெற்றோர்கள் ஒரே நேரத்தில் அவளது நெற்றியில் முத்தம் கொடுத்தனர். ஒற்றுமையைக் கண்டு அவள் தனது திட்டம் வெற்றிக்கரமாக முடிகிறது என்று நினைத்து குளிர்ச்சி அடைந்தாள். ஆனால்…..

“உன்னால்தான் நமது மகள் இந்நிலைக்கு ஆளாக்கினாள்!, என்று ஒருவருக்கொருவர் தனது பெற்றோர்கள் பழி சுமத்தி சண்டையிட்டனர்.

தங்கள் இருவருக்குமே சிறிது இடைவெளி தேவை என அவள் அப்போதுதான் சோகத்தோடு உணர்ந்தவாறு விழிகளை மூடினாள்.

மௌனம்

மௌனம் சூழ்ந்த அறையில் அவ்வப்போது வெளிப்பட்ட நிர்மலாவது புன்முலுவுகள் மட்டுமே காற்றை நிறப்பின. காலையிலிருந்து அவள் ஏக்கத்துடன் எதிர்ப்பார்த்துக்கொண்டிருந்த ஒரு குறுந்தகவல் கூட  இன்னும் வரவில்லை.  இரண்டு நாட்கள் கடந்தும் அவனின் தனியா கோபத்தை இது  குறித்தது. சிறிய ஒரு வாக்குவாதத்தில் தொடங்கிய  விரிசல் இன்று இந்த அளவிற்கு முற்றிவிட்டது. அவனிடம் நாளடைவில் வேருற்று இருந்த ஒரு வித தனிமையே இதற்குத் தூண்டுகோளாக இருந்தது.

படர்ந்த காடுகள். சலிப்பளிக்கும் விடுதி கட்டடங்கள். கடுமையான ராணுவ பயிற்சி. இதற்கு முன்பு காணா முகங்களோடு ஒரு அறையைப் பகிர்ந்துக்கொண்டு முழு நேரத்தையும் அவர்களோடு செலவழிக்க வேண்டிய கட்டாயச்சூழல்.இரண்டு வாரங்களாகியும் இந்த மாற்று சூழலை ஏற்றுக்கொள்ள அவனது மனம் மறுத்தது. இரவு நேரங்களில் எந்த வித கட்டுப்பாடுகளுமின்றி நிர்மலாவுடன் தொலைப்பேசியின் மூலம் பேசும் சுதந்திரமும் இப்போது அவனிடத்தில் இல்லை.

சுற்றி பலர் இருந்தும் அவனை விழுங்கிக் கொண்டிருந்தது அந்த தனிமை.  தனிமை, மிக கொடுமையான மனித உணர்வுகளில் ஒன்று. சில இரவுகள் உறங்க முடியாமல் தனிமையின் பிடியிலிருந்து விடுபட முடியாமல் போர்வைக்குள்ளே அழுவதை  பழக்கமாக்கிக்கொண்டான் அந்த இருவது வயது இளைஞன். ஆண்  அல்லவா. பலரின் முன்னிலையில் வெளிப்படுத்த முடியாத உணர்வு.   சமுதாய பார்வை யில் இன்னும் முழுமையாக வரவேற்க முடியாத ஒன்று .  எவ்வலியையும் சகித்துக்கொண்டு கல்மனதை வெளிக்காட்ட வேண்டிய ஒரு  போலியான போக்கு.

சரி அந்த வார இறுதியில்,  ஒரு நாள் ஓய்வின்போதாவது  அவளோடு  நேரத்தைக்  கழிக்க விரும்பினான்.  ஆனால் அவளுக்கோ நண்பர்களோடு வேறு திட்டங்கள் இருந்தன. தோழி வெளியூருக்குச் செல்வதற்கு முன்னர் அவளுக்காக ஒரு சிறிய கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்ய நினைத்தால் நிர்மலா.அவளிடத்திலும் நியாயம் இருந்தது. கட்டுப்பாடுகள் மிகுந்த ஒரு பின்னனியிலிருந்து வந்து தனக்கென விரும்பிய உலகை இப்போது தானே அவள் செதுக்க தொடங்கியிருக்கிறாள். காதலானது எதிர்ப்பார்ப்புகள் அவளது சுதந்திரத்தைப்  மீண்டும் பறிப்பதில் அவளுக்கு உடன்பாடு இல்லை.

உணர்ச்சிவசப்பட்டு ஆதங்கத்தால் ஒரு சில வார்த்தைகளை அவள் தவறிவிட நேரிட்டது. ஆனால்  உடைந்துபோய் இருந்த அவனது  நெஞ்சிற்கு தேவையாக இருந்தது அவளது அரவணைப்பு. அவளுடைய கடும் சொற்கள் அல்ல. “மௌனம். அந்த இரு முனைக் கத்தி! அன்று  சற்று மௌனம் சாதித்திருந்தால் இன்று அவளது இதயத்தைச் மெதுவாக  ஊடுருவிக்கொண்டிருக்குமா இந்த மௌனம். தங்கள் இருவருக்குமே சிறுது இடைவேளி தேவை என அவள் சோகத்தோடு உணர்ந்தாள்.