செயலவை (2021-2023)
-
தலைவர்
நா.ஆண்டியப்பன்
-
துணைத் தலைவர்
சு.முத்துமாணிக்கம்
-
செயலாளர்
கிருத்திகா
-
துணைச் செயலாளர்
கோ.இளங்கோவன்
-
பொருளாளர்
பிரேமா மகாலிங்கம்
எழுத்தாளர் கழகச் செயலவைசிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் 22ஆவது பொதுக்கூட்டத்தில் அடுத்த ஈராண்டுக்கான (2021-2023) புதிய செயலவையினர் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கடந்த 27.06.2021 ஞாயிற்றுக்கிழமை காலையில் சூம் வழியில் கூட்டம் நடைபெற்றது.
சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் புதிய தலைவராக முன்னைய தலைவரும் கடந்த தவணையில் துணைத் தலைவராக இருந்தவருமான திரு. நா. ஆண்டியப்பன் மீண்டும் பொறுப்பேற்றுள்ளார். துணைத் தலைவராக திரு. சு.முத்துமாணிக்கம் தேர்ந்தெடுக்கப்பட்டார். செயலாளராக திருவாட்டி கிருத்திகாவும் துணைச் செயலாளராக திரு. கோ. இளங்கோவனும் நீடிக்கின்றனர். புதிய பொருளாளராக திருவாட்டி பிரேமா மகாலிங்கம் பொறுப்பேற்றுள்ளார். திரு. அன்புச்செல்வன், திருவாட்டி மலையரசி, திரு.கண.மாணிக்கம், திரு. ராஜா சண்முகசுந்தரம், திருவாட்டி மணிமாலா மதியழகன் ஆகியோர் செயலவை உறுப்பினர்களாக நீடிக்கும் வேளையில் திருவாட்டி பிரதீபா வீரபாண்டியன் புதிய செயலவை உறுப்பினராக இணைந்துள்ளார்.
காலை மணி 10.00க்குத் தொடங்கிய கூட்டம் 12.00க்கு நிறைவடைந்தது.