கம்பன் விழாவில் சிறப்புப் பட்டி மன்றம்

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் ஆண்டுதோறும் நடத்தும் கம்பன் விழா வரும் சனிக்கிழமை 03.09.2022 அன்று மாலை மணி 6.00 முதல் 9.00 வரை உமறுப் புலவர் தமிழ் மொழி நிலையத்தில் சிறப்பாக நடைபெறவிருக்கிறது.

விழாவில் அமைதியின் ரோஜாக்கள் (Roses of the Peace) நிறுவுனரும் நாடாளுமன்ற மேனாள் நியமன உறுப்பினருமான திரு. முகமது இர்ஷாத் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ளவிருக்கிறார்.

விழாவில் சிறப்பு அங்கமாக “இராமனுக்குப் பெரிதும் ஏற்றம் தந்தவர்கள் உடன்பிறந்த தம்பியரா? (பரதன், இலக்குவன், சத்துருக்கன்) உடன்பிறவாத் தம்பியரா? (குகன், சுக்கிரீவன், வீடணன்)” என்னும் தலைப்பில் பட்டி மன்றம் நடைபெறும்.

சிங்கப்பூர்ச் சமூக அறிவியல் பல்கலைக்கழக இணைப் பேராசிரியர் முனைவர் ந. செல்லக்கிருஷ்ணன் நடுவராகப் பணியாற்றி நல்லதொரு தீர்ப்பை வழங்குவார்.

“உடன்பிறந்த தம்பியரே” என்னும் தலைப்பில் முனைவர் இரத்தின வேங்கடேசன் தலைமையில் கண்ணன் வைஷ்ணவி, முனைவர் ராஜி சீனிவாசன் ஆகியோர் வாதிடுவர்.

“உடன்பிறவாத் தம்பியரே” என்னும் தலைப்பில் முனைவர் சரோஜினி செல்லக்கிருஷ்ணன் தலைமையில் திருவாட்டி வானதி பிரகாஷ், முனைவர் க. இராஜகோபாலன் ஆகியோர் வாதிடுவர்.

கம்பன் விழாவை ஒட்டி கம்பன் கவிதைகளில் மாணவர்களுக்குக் காஹூட் வழியாகப் புதிர்ப் போட்டி நான்கு பிரிவுகளாக நடத்தப்பட்டது. உயர்நிலை 1 & 2, உயர்நிலை 3, உயர்நிலை 4 & 5, உயர்கல்வி நிறுவனங்கள் ஆகியவையே அப்பிரிவுகள். அதில் வெற்றிபெற்றவர்களுக்கு விழாவில் பரிசுகள் வழங்கப்படும்.

கவிச்சக்கரவர்த்தி கம்பனின் கவிச்சுவை பருகவும், இனிய தமிழைச் சுவைக்கவும் வரும் சனிக்கிழமை உமறுப் புலவர் தமிழ் மொழி நிலையத்திற்கு உரிய நேரத்தில் வருகை தரும்படி இலக்கிய ஆர்வலர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், தமிழன்பர்கள் ஆகிய அனைவரையும் அன்புடன் அழைக்கிறது சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம்.

Kamban Vizha 2022 Inv

கம்பன் விழா 2019

நாள்: 13.10.2019 பிற்பகல் 3:00 மணி முதல் வழக்காடு மன்றம்; மாலை 6:00 மணி  முதல் விழா

இடம்: உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையம்

கம்பன் விழா 2018

சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் படைத்த கம்பன் விழா 2018 பட்டிமன்றம்.  கம்பன் தம்பியராக ஏற்றுக் கொண்ட மூவரில் ஏற்றம் பெற்றவன் குகனா?  சுக்கீரீவனா?  விபீடனனா?  பார்த்து மகிழுங்கள் – மன்னை மிடீயா தயாரிப்பு

சிறப்பு விருந்தினர் இலங்கை தூதரகத் துணைத் தூதர் திரு அமீர் அஜ்வத் உரை – காணொளி

கம்பன் விழா 2015

கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் “உள்ளத்தனைய உயர்வு எனும் தலைப்பில் ஆற்றிய சிறப்புரையின் காணொளி:

பகுதி 1

பகுதி 2

பகுதி 3