சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம்
கம்பன் விழா 2022 – மாணவர் புதிர்ப் போட்டிகள்
(KAMBAN VIZHA QUIZ CONTEST FOR NIE, JC, POLY & UNI STUDENTS)
- இந்தப் போட்டிகள் சிங்கப்பூர் கல்வி அமைச்சின் கீழ் செயல்படும் பலதுறைத் தொழிற் கல்லூரிகள், தேசியக் கல்விக் கழகம், சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம், நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகம், சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் (JC, POLY, NIE, NUS, NTU, SMU, SUSS) மாணவர்கள் பங்கு பெறலாம்.
- உங்கள் கல்வி நிலையத்திலிருந்து அதிகமான மாணவர்களைப் பங்கேற்க ஊக்கப்படுத்துங்கள். உங்கள் கல்வி நிலையத்திலிருந்து குறைந்தது 10 மாணவர்களையாவது பங்கேற்கச் செய்வீர்கள் என நம்புகிறோம்.
- கம்பன் விழாப் போட்டிகள் மவுண்ட்பேட்டன் எம்.ஆர்.டி. நிலையத்திற்கு அருகிலுள்ள குட்மன் கலை மையத்தில் நடைபெறும். (Address: Goodman Arts Centre, BLK B, 90 Goodman Road, Singapore 439053 )
- போட்டியில் புதிர்க் கேள்விகள் Kahoot செயலியின் வழியாகக் கேட்கப்படும். ஒவ்வொரு கேள்விக்கும் நான்கு பதில்கள் கொடுக்கப்படும்; அவற்றில் சரியான பதிலை மாணவர்கள் பதிவிட வேண்டும்.
- அதனால் மாணவர்கள் கட்டாயம் தங்கள் திறன்பேசிகளைக் (Smart phones) கொண்டு வர வேண்டும்.
- கம்ப இராமாயணத்தின் பால காண்டத்திலுள்ள மிதிலைக் காட்சிப் படலத்திலிருந்து கொடுக்கப்பட்டுள்ள 25 பாடல்களில் இருந்து 25 கேள்விகளுக்குப் பதில் அளிக்க வேண்டும்.
- மாதிரி வினா:
“காசு அறு பவளச் செங் காய் ” எனும் வரியில் ‘காசு’ என்பதன் பொருள் என்ன?
- தவறு குற்றம் 3. மணம் 4. வண்ணம்
- இந்தப் படலத்திற்குரிய பாடல்கள் இதனுடன் இணைக்கப்பட்டுள்ளன. இல்லையெனில் http://singaporetamilwriters.com/kambanvizhacontest/ எனும் எழுத்தாளர் கழக இணையத் தளத்திலும் பாடல்கள் உள்ளிட்ட விவரங்கள் கிடைக்கும்.
- கேள்விகள் திரையில் தெரிந்தவுடன் குறிப்பிட்ட நேரத்திற்குள் சரியான விடையைப் பதிவு செய்பவர்களுக்குப் புள்ளிகள் வழங்கப்படும். சரியான விடையை மற்றவர்களைவிட விரைவாகப் பதிவு செய்பவர்களுக்குக் கூடுதல் புள்ளிகள் கிடைக்க வாய்ப்புண்டு.
- அதிகப் புள்ளிகள் பெற்ற முதல் 6 மாணவர்களுக்குப் பரிசு வழங்கப்படும். புள்ளிகள் சமமாக இருந்தால் அவர்களுக்கு மட்டும் மீண்டும் கேள்விகள் கேட்கப்படும். வெற்றியாளர்களுக்கு இவ்வாண்டு பரிசுத் தொகைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
- பரிசுகள் விவரம் :- முதல் பரிசு $300; இரண்டாம் பரிசு $250; மூன்றாம் பரிசு $200; மூன்று ஊக்கப் பரிசுகள் ஒவ்வொன்றும் $150.
- போட்டிக்கான விண்ணப்பத்தைக் கீழ்க்கண்ட கூகுள் படிவத்தின் மூலம் ஆசிரியர்கள் அல்லது மாணவர்கள் 20.08.2022ஆம் தேதிக்குள் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.
பதிவுப் படிவம்: : https://forms.gle/w3e2TcG9NMuyFQNy9
- போட்டி 27.08.2022 சனிக்கிழமை மாலை 4.30 மணி முதல் நடைபெறும். போட்டியாளர்கள் அனைவரும் அன்று மாலை 4.00 மணிக்குள் போட்டி நடைபெறும் குட்மன் கலை மையத்தில் இருக்க வேண்டும். போட்டி தொடங்கிய பிறகு தாமதாக வரும் மாணவர்கள் போட்டி நடைபெறும் அறைக்குள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
- மாணவர்கள் தங்கள் பெயர்களைப் பதிவு செய்யும் போது அவர்களின் முழுப் பெயர்களை அடையாள அட்டையில் உள்ளதுபோல் ஆங்கிலத்திலும் தமிழிலும் பதிவு செய்ய வேண்டும். இது வெற்றியாளர்களுக்குச் சரியான பெயரில் காசோலை எழுதவும் சான்றிதழ் வழங்கவும் எங்களுக்கு உதவியாக இருக்கும்.
- வெற்றியாளர்களுக்கு 03.09.2022 அன்று நடைபெறும் கம்பன் விழாவில் ரொக்கக் காசோலைகளும் (Cash Cheques) சான்றிதழ்களும் வழங்கப்படும்.
(KAMBAN VIZHA QUIZ CONTEST FOR SECONDARY STUDENTS)
1) இந்தப் போட்டிகள் உயர்நிலை மாணவர்களுக்கு மூன்று பிரிவுகளாக நடத்தப்படும்.
2) உயர்நிலை 1&2 ஒரு பிரிவாகவும், உயர்நிலை 3 ஒரு பிரிவாகவும், உயர்நிலை 4&5 ஒரு பிரிவாகவும் போட்டிகள் நடைபெறும்.
3) ஒவ்வொரு பள்ளியும் ஒரு பிரிவுக்கு இரண்டு மாணவர்களைப் போட்டிக்குப் பதிவு செய்யலாம். 3 பிரிவுகளுக்கும் மொத்தம் 6 மாணவர்களைப் பதிவு செய்யலாம்.
4) கம்பன் விழாப் போட்டிகள் மவுண்ட்பேட்டன் எம்.ஆர்.டி. நிலையத்திற்கு அருகிலுள்ள குட்மன் கலை மையத்தில் நடைபெறும். (Address: Goodman Arts Centre, BLK B # 03-19, 90 Goodman Road, Singapore 439053 )
5) போட்டியில் புதிர்க் கேள்விகள் Kahoot செயலியின் வழியாகக் கேட்கப்படும். ஒவ்வொரு கேள்விக்கும் நான்கு பதில்கள் கொடுக்கப்படும்; அவற்றில் சரியான பதிலை மாணவர்கள் பதிவிட வேண்டும்.
6) அதனால் மாணவர்கள் கட்டாயம் தங்கள் திறன்பேசிகளைக் (Smart phones) கொண்டு வர வேண்டும்.
7) உயர்நிலை 1&2 மாணவர்கள், கம்ப இராமாயணத்தின் பால காண்டத்திலுள்ள கையடைப் படலத்தில் கொடுக்கப்பட்டுள்ள 10 பாடல்களில் இருந்து கேட்கப்படும் 10 கேள்விகளுக்குப் பதில் அளிக்க வேண்டும்.
மாதிரி வினா:
‘நனை வரு கற்பக நாட்டு நன்னகர்’ என்று கம்பன் ‘கையடைப் படலத்தில்’ கூறும் நகர் எது?
- அயோத்தி அமராவதி 3. மிதிலை 4. கிட்கிந்தை
8) உயர்நிலை 3 மாணவர்கள் கம்ப இராமாயணத்தின் பால காண்டத்திலுள்ள தாடகை வதைப் படலத்தில் கொடுக்கப்பட்டுள்ள 15 பாடல்களில் இருந்து கேட்கப்படும் 15 கேள்விகளுக்குப் பதில் அளிக்க வேண்டும்.
மாதிரி வினா:
‘அலர் கதிர்ப் பரிதி மண்டிலம்’ என்ற சொற்றொடரில் உள்ள ‘பரிதி’ என்ற சொல்லுக்கு விளக்கம் என்ன?
- நிலா நட்சத்திரம் 3. சூரியன் 4. வானம்
9) உயர்நிலை 4&5 மாணவர்கள் கம்ப இராமாயணத்தின் பால காண்டத்திலுள்ள வேள்விப் படலத்தில் கொடுக்கப்பட்டுள்ள 20 பாடல்களில் இருந்து கேட்கப்படும் 20 கேள்விகளுக்குப் பதில் அளிக்க வேண்டும்.
மாதிரி வினா:
‘விண்ணவர்க்கு ஆக்கிய முனிவன் வேள்வியை’ என்னும் இப்பாடலடியில் யாருக்காக முனிவர் வேள்வி நடத்துவதாகக் கம்பர் கூறுகிறார்?
- முனிவர்களுக்கு 2. அசுரர்களுக்கு
- மன்னர்களுக்கு 4. தேவர்களுக்கு
10) இந்த மூன்று படலங்களுக்குரிய பாடல்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. அவற்றை http://singaporetamilwriters.com/kambanvizhacontest/ எனும் எழுத்தாளர் கழக இணையத் தளத்திலும் காணலாம்.
11) கேள்விகள் திரையில் தெரிந்தவுடன் குறிப்பிட்ட நேரத்திற்குள் சரியான விடையைப் பதிவு செய்பவர்களுக்குப் புள்ளிகள் வழங்கப்படும். சரியான விடையை மற்றவர்களைவிட விரைவாகப் பதிவு செய்பவர்களுக்குக் கூடுதல் புள்ளிகள் கிடைக்க வாய்ப்புண்டு.
12) அதிகப் புள்ளிகள் பெற்ற முதல் 6 மாணவர்களுக்குப் பரிசு வழங்கப்படும். புள்ளிகள் சமமாக இருந்தால் அவர்களுக்கு மட்டும் மீண்டும் கேள்விகள் கேட்கப்படும். வெற்றியாளர்களுக்கு இவ்வாண்டு பரிசுத் தொகைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
13) பரிசுகள் விவரம் : உயர்நிலை 1&2 :- முதல் பரிசு $150; இரண்டாம் பரிசு $100; மூன்றாம் பரிசு $75; மூன்று ஊக்கப் பரிசுகள் ஒவ்வொன்றும் $50.
14) பரிசுகள் விவரம் : உயர்நிலை 3 :- முதல் பரிசு $200; இரண்டாம் பரிசு $150; மூன்றாம் பரிசு $100; மூன்று ஊக்கப் பரிசுகள் ஒவ்வொன்றும் $75.
15) பரிசுகள் விவரம் : உயர்நிலை 4&5 :- முதல் பரிசு $250; இரண்டாம் பரிசு $200; மூன்றாம் பரிசு $150; மூன்று ஊக்கப் பரிசுகள் ஒவ்வொன்றும் $100.
16) போட்டிக்கான விண்ணப்பத்தை அந்தந்தப் பிரிவுகளுக்கான கூகுள் படிவங்கள் மூலம் பள்ளி ஆசிரியர்கள் 07.08.2022ஆம் தேதிக்குள் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.
17) போட்டிகள் 14.08.2022 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.30 மணி முதல் நடைபெறும்.
கீழ்க்கண்ட நேரப்படி போட்டிகள் நடைபெறும்:
உயர்நிலை 1 & 2 : பிற்பகல் மணி 2.30 முதல் 3.00 வரை
உயர்நிலை 3 : பிற்பகல் மணி 3.30 முதல் 4.00 வரை
உயர்நிலை 4 & 5: பிற்பகல் மணி 4.30 முதல் 5.15 வரை
18) போட்டியாளர்கள் அனைவரும் தங்கள் பிரிவுப் போட்டி தொடங்குவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாக போட்டி நடைபெறும் குட்மன் கலை மையத்தில் இருக்க வேண்டும். போட்டி தொடங்கிய பிறகு தாமதாக வரும் மாணவர்கள் போட்டி நடைபெறும் அறைக்குள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
19) ஆசிரியர்கள் மாணவர்களின் பெயர்களைப் பதிவு செய்யும் போது அவர்களின் முழுப் பெயர்களை ஆங்கிலத்திலும் தமிழிலும் பதிவு செய்ய வேண்டும். இது மாணவர்களுக்குச் சான்றிதழ் வழங்க எங்களுக்கு உதவியாக இருக்கும்.
20) வெற்றியாளர்களுக்கு 03.09.2022 அன்று நடைபெறும் கம்பன் விழாவில் ரொக்கப் பற்றுச்சீட்டுகளும் (Cash Vouchers) சான்றிதழ்களும் வழங்கப்படும்.
குறிப்பு:
போட்டி பற்றிய மேல் விவரங்களுக்கும் விளக்கங்களுக்கும் கீழ்க்கண்ட மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம்: [email protected] (எழுத்தாளர் கழகம்) அல்லது [email protected] (செயலாளர் கிருத்திகா).
அல்லது துணைத் தலைவர் திரு. சு. முத்துமாணிக்கம் (9675 3215), செயலவை உறுப்பினர்கள் திருவாட்டி மலையரசி (9782 6039) திருவாட்டி மணிமாலா (8725 8701) ஆகியோரைத் தொடர்பு கொள்ளலாம்.
போட்டிக்குரிய பாடல்களுக்கு இங்கே தட்டிப் பார்க்கலாம்.
உயர்நிலை 1&2 – கையடைப் படலம்
உயர்நிலை 3 – தாடகை வதைப் படலம்
உயர்நிலை 4&5 – வேள்விப் படலம்