கவியரசு கண்ணதாசன் பாட்டுத் திறன் போட்டி 2022

பதிவிற்கு இறுதி நாள் –  22.09.2022 (பதிவு விவரங்கள் கீழே)

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் ஆண்டுதோறும் நடத்தும் கவியரசு கண்ணதாசன் விழாவை வரும் நவம்பர் 19ஆம் தேதி சிறப்பாக நடத்தவிருக்கிறது. அதனை ஒட்டி இவ்வாண்டும் இரண்டு பிரிவுகளாகக் கண்ணதாசன் பாட்டுத் திறன் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பாடல் போட்டிகளின் முதல் சுற்று வரும் 25.09.2022ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி முதல் 100, விக்டோரியா சாலையிலுள்ள தேசிய நூலகத்தில் நடைபெறும்.

6 வயது முதல் 14 வயது வரை உள்ளவர்களுக்கு ஒரு பிரிவாகவும் (பிறந்த தேதி 19.11.2008 முதல் 19.11.2016 வரை) 14 வயதிற்கு மேலுள்ளவர்களுக்கு (19.11.2008க்கு முன்னர் பிறந்தவர்கள்) ஒரு பிரிவாகவும் போட்டி நடைபெறும். மாணவர்களும் பொது மக்களும் இதில் பங்கேற்கலாம். கவியரசு கண்ணதாசன் இயற்றிய திரைப்பாடல்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இந்தப் பட்டியலில் ஒவ்வொரு பிரிவுக்கும் உள்ள 60க்கு மேற்பட்ட பாடல்களில் ஏதாவது ஒரு பாடலைத் தேர்வு செய்து பாட வேண்டும்.

ஆண்குரல் பாடல்கள்

பெண்குரல் பாடல்கள்

இந்தப் போட்டியில் ஆண்கள் ஆண்குரல் பாடல்களையும் பெண்கள் பெண்குரல் பாடல்களையும் பாட வேண்டும். மாற்றிப் பாடக்கூடாது. அந்தப் பட்டியலில் இல்லாத கண்ணதாசன் பாடல்களைப் பாட, எழுத்தாளர் கழகத்திடம் தெரிவித்து முன் அனுமதி பெற வேண்டும்.

இந்தப் போட்டியில் பங்கேற்க கீழே கொடுக்கப்பட்டுள்ள கூகுள் படிவத்தில் பதிவு செய்வதுடன் பாடலைப் பின்னணி இசையில்லாமல் பாட வேண்டும். தேர்வுச் சுற்றுக்கு முழுப் பாடலையும் பாட வேண்டியதில்லை. பல்லவி, அனுபல்லவி மற்றும் முதலாவது சரணத்தை மட்டும் பாடினால் போதும்.

பதிவு செய்ய வேண்டிய கூகுள் இணைப்பு (Link) இதுதான் : https://forms.gle/s4RD3jjM4pXXtgzY8

இரு பிரிவுகளுக்கும் பாடகர்கள் பதிவு செய்ய வேண்டிய இறுதி நாள்  22.09.2022 வியாழக்கிழமை.

தேர்வுச் சுற்றிலிருந்து ஒவ்வொரு பிரிவிலும் 6 பேர் இறுதிச் சுற்றுக்குத் தெரிவு செய்யப்படுவர். இறுதிச் சுற்று பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

சிங்கப்பூரில் பணிபுரியும்/வசிக்கும் (அடையாள அட்டை அல்லது வேலை அனுமதிச் சீட்டு உள்ளவர்கள்) யாரும் போட்டியில் பங்கேற்கலாம்.

பரிசுகள்

14 வயதிற்குக் கீழ்:  மொத்தம் 6 பரிசுகள் வழங்கப்படும். பரிசுக்கேற்ற வெற்றிக் கிண்ணங்களும் சான்றிதழ்களும் வழங்கப்படும்.

 14 வயதிற்கு மேல்: முதல் பரிசு  $200  இரண்டாம் பரிசு  $100   மூன்றாம் பரிசு $75 மூன்று ஊக்கப் பரிசுகள் ஒவ்வொன்றும் $50.