கவியரசு கண்ணதாசன் விருது

kannadaasan

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் ஆண்டுதோறும் நடத்தும் கவியரசு கண்ணதாசன் விழாவில் அவர் பெயரில் விருது வழங்கி வருகிறது.  கண்ணதாசன் ஒரு கவிஞர்; சிறுகதை, நாவல், கட்டுரை, நாடக எழுத்தாளர்; திரைக்கதை வசனம் எழுதியவர்; பாடலாசிரியர் என பலதிறன் படைத்தவர்; அந்தத் துறைகளிலே முத்திரை பதித்தவர்.

அதனால் மேற்குறிப்பிட்ட துறைகளில் குறைந்தது ஏதாவது ஒன்றில் சிறந்த திறன்காட்டி வரும் ஒருவர் ஆண்டுதோறும் தெரிவு செய்யப்பட்டு விருது வழங்கப்படுகிறது. அது அவர்களுக்கு மேலும் ஊக்கமளிப்பதாக இருக்கும் என்று எழுத்தாளர் கழகம் நம்புகிறது. மேலும் இந்த விருதுத் தேர்வில் பொது மக்களும் பங்களிக்க வேண்டும் என எழுத்தாளர் கழகம் விரும்புகிறது.

 

 

இதுவரை விருது பெற்றவர்கள்

2012

பாடகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர் ஷபிர்

2013

நாடகக் கலைஞர், எழுத்தாளர் எஸ்.என்.வி. நாராயணன்

2014

எழுத்தாளர், கவிஞர், நாடகாசிரியர் முனைவர் இளவழகு முருகன்

2015

தொலைக்காட்சி நாடக எழுத்தாளர், பாடலாசிரியர், திருமதி ஜெயா இராதாகிருஷ்ணன்

2016

குறும்பட எழுத்தாளர், மேடை நாடகக் கதை, வசனகர்த்தா கவிஞர் சலீம் ஹாடி

2017

எழுத்தாளர், பத்திரிக்கையாளர், வாசகர் வட்ட துணைத் தலைவர்(2017) கவிஞர் எம். கே. குமார்

2018

தொலைக்காட்சி கதை, திரைக்கதை, வசன எழுத்தாளர் திரு. S.S. விக்னேஸ்வரன் சுப்பிரமணியம் 

2019

திரு. முகம்மது யாசிர்

2020

கல்வியாளர், எழுத்தாளர், ஆய்வாளரான திருவாட்டி கலைவாணி இளங்கோ

2021

எழுத்தாளர், கதாசிரியர், நாடக ஆசிரியர், வசனகர்த்தா, பாடலாசிரியர் திரு. சையத் அஷரத்துல்லா