ஆனந்த பவன் மு.கு. இராமச்சந்திரா

நினைவு புத்தகப் பரிசு

mu.ku.ramachandra

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் 2010ஆம் ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் ஆனந்த பவன் அமரர் மு.கு. இராமச்சந்திரா நினைவு புத்தகப் பரிசுப் போட்டியை நடத்தி வருகிறது.

அமரர் மு.கு. இராமச்சந்திரா தமிழுக்கும் தமிழ் வளர்ச்சிக்கும் குறிப்பாக இளைய தலைமுறையினர் தாய்மொழியைக் கட்டாயம் கற்க வேண்டும் எனப்திலும் உறுதியாக இருந்தவர். அதற்காக அமைப்புகளுக்குப் பல விதத்திலும் உதவிகளைச் செய்தவர்.

அதனால் அவர் நினைவைப் போற்றும் வகையில் ஏதாவது செய்ய வேண்டும் என்று கருதி இந்தப் புத்தகப் பரிசுத் திட்டத்தை எழுத்தாளர் கழகம் முன்வைத்தது. ஆனந்த பவன் குடும்பத்தினர் குறிப்பாக அவரது துணைவியார் திருமதி பானுமதி இராமச்சந்திரா மிகுந்த மகிழ்வுடன் இதற்கு ஒப்புக்கொண்டடார். பரிசுத் தொகையான 2,000 வெள்ளியை ஆண்டுதோறும் ஆனந்த பவன் உணவகமே வழங்கி வருகிறது.

2021 புத்தகப் பரிசு

Book Prize Entries 2021 Katturai

2020 புத்தகப் பரிசு

Book Prize

2019 புத்தகப் பரிசு

Prize Presentation

 

இதுவரை பரிசு பெற்றவர்கள்
ஆண்டு நூலின் தலைப்பு எழுத்தாளர் துறை
2010 புதிதாக இரண்டு முகங்கள் இந்திரஜித் சிறுகதை
2011 சங்கமம் முருகடியான் கவிதை
2012 கடல் கடந்த தமிழ்க் கலாசாரம் எஸ்.எஸ். சர்மா கட்டுரை
2013 ஒரு கோடி டாலர்கள மாதங்கி சிறுகதை
2014 காணாமல் போன கவிதைகள் நெப்போலியன் கவிதை
2015 பன்முக நோக்கில் சிங்கப்பூர்க் கவிதைகள் முனைவர் கோட்டி திருமுருகானந்தம் கட்டுரை
2016 மூன்றாவது கை ஷாநவாஸ் சிறுகதை
2017 லீ குவான் இயூ பிள்ளைத் தமிழ் அ.கி.வரதராசன் கவிதை
2018 சிங்கப்பூரில் தமிழ்க் கல்வி வரலாற்று நோக்கில் (1950-2009) முனைவர் மா. இராஜிக்கண்ணு கட்டுரை
2019 நீர்த் திவலைகள் பிரேமா மகாலிங்கம் சிறுகதை
2020 அங்குசம் காணா யானை பிச்சினிக்காடு இளங்கோ கவிதை
2021 கரையும் தார்மீக எல்லைகள் சிவானந்தம் நீலகண்டன் கட்டுரை