முத்தமிழ் விழா 2023 மாணவர் போட்டிகள்

போட்டிக்கான நுழைவுப் படிவங்களை சமர்ப்பிக்க வேண்டிய இறுதிநாள் கீழ் வருமாறு.

பாலர் பள்ளி : 11.3.2023

தொடக்கப்பள்ளி: 11.3.2023

உயர்நிலை: 18.3.2023

தொடக்கக்கல்லூரி / பலதுறை தொழிற் கல்லூரி, புதுமுக வகுப்பு: 11.3.2023 

முத்தமிழ் விழாவை ஒட்டி ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களுக்கு பல்வேறு இலக்கியப் போட்டிகளை சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் நடத்தி வருகிறது. இவ்வாண்டும் அனைத்து நிலை மாணவர்களுக்கும் போட்டிகளை நேரடியாக  வழி நடத்துகிறது. மாணவர்கள் பள்ளி ஆசிரியரைத் தொடர்புகொண்டு அவர் மூலமாக போட்டிக்குப் பதிவு செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம்.

சிங்கப்பூர்ப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் மட்டுமே போட்டிகளில் பங்கேற்கலாம்.

பாலர் பள்ளி மாணவர்களுக்கு (மாறுவேடப் போட்டி)

ஒவ்வொரு பாலர் பள்ளியும் போட்டிக்கு தலா மூன்று மாணவர்களை அனுப்பலாம். PCF/PAP பாலர் பள்ளி மாணவர்களின் பெற்றோர் மட்டும் தங்கள் பிள்ளைகளை நேரடியாகப் பதிவு செய்யலாம். 

விதிமுறைகள்    கடிதம்

தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள்

P1 – P2     மாறுவேடப் போட்டி

P3 – P4    கதை சொல்லும் போட்டி

P5 – P6    பேச்சுப் போட்டி

விதிமுறைகளுக்கு இங்கே தட்டவும்.

உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள்

உயர்நிலை 1 – 2  –> சொல்லுக்குச் சொல் – விதிமுறைகள்

உயர்நிலை 3 –> பத்திகளை மொழிபெயர்த்தல் – விதிமுறைகள்

உயர்நிலை 4 – 5 –> சிறுகதை எழுதுதல் – விதிமுறைகள்

தொடக்கக்கல்லூரி, பலதுறை தொழிற் கல்லூரி, புதுமுக வகுப்பு மாணவர்களுக்கான போட்டிகள்

சிறுகதை எழுதுதல் – விதிமுறைகள்

போட்டி நடைபெறும் வளாகம்: NORTHLAND SECONDARY SCHOOL, No. 3, Yishun Street 22, Singapore768578 (please take SMRT Bus No. 811 from Yishun Interchange)

போட்டி நடைபெறும் நாள்கள்:

பாலர் பள்ளி : 18.3.2023

தொடக்கப்பள்ளி: 18.3.2023

உயர்நிலை: 25.3.2023

தொடக்கக்கல்லூரி / பலதுறை தொழிற் கல்லூரி, புதுமுக வகுப்பு: 18.3.2023 

மேல் விவரங்களுக்கு:

திருமதி கிருத்திகா (செயலாளர்) [email protected]

திருமதி மலையரசி (செயலவை  உறுப்பினர்) 9782 6039

For further information, please contact:
Ms. Kiruthika (Secretary) [email protected]
Mdm. Malaiarasi (exco member) HP: 9782 6039