முத்தமிழ் விழா சிறுகதைப் போட்டிகள் 2023
(அ) பொதுப் பிரிவு – சிறப்புச் சிறுகதைப் பிரிவு –
(ஆ) பல்கலைக்கழக மாணவர்/இளையர் பிரிவு
அனுப்ப வேண்டிய இறுதி நாள்: 25.03.2023
(அ) முத்தமிழ் விழா சிறுகதைப் போட்டியுடன்
அறிவியல், வரலாற்றுக் கதைப் போட்டி
சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் இந்த ஆண்டு முத்தமிழ் விழாவை வழக்கம்போல் தமிழ் மொழி விழாவின் ஒரு பகுதியாக வரும் ஏப்ரல் மாதம் நடத்தவிருக்கிறது. முத்தமிழ் விழாவை ஒட்டி ஆண்டுதோறும் பொதுமக்களுக்கு இலக்கியப் போட்டிகள் நடத்துவது வழக்கம். ஆகவே, இந்த ஆண்டும் வழக்கம்போல் சிறுகதைப் போட்டி நடத்தப்படும்.
இவ்வாண்டும் கூடுதல் சிறப்பாக ஓர் சிறந்த அறிவியல் கதைக்கும் ஒரு சிறந்த வரலாற்றுக் கதைக்கும் தனியாகப் பரிசுகள் வழங்கப்படும்.
அனைத்துப் போட்டிகளுக்கும் படைப்புகள் வந்து சேர வேண்டிய இறுதி நாள்: 25.03.2023.
பொது மக்கள் – சிறுகதைப் போட்டிப் பரிசுகள்
முதல் பரிசு $500; 2ஆம் பரிசு $300; 3ஆம் பரிசு $200. 3 ஊக்கப் பரிசுகள் ஒவ்வொன்றும் $100.
பொது மக்கள் – சிறுகதைப் போட்டிக்கான விதிகள்
இவ்வாண்டு அழகு எனும் கருப்பொருளைக் கொண்டு கதைகள் புனையப்பட வேண்டும். கதைகள் சிங்கப்பூர்ச் சூழலில், நடப்பதாக அமைந்திருந்தால் சிறப்பு. பொது மக்கள் எழுதும் கதைகள் 1,200 முதல் 1,500 வார்த்தைகளுக்குள் இருக்க வேண்டும். ஒருவர் அதிகபட்சமாக 3 கதைகள் அனுப்பலாம். கதைகளை இந்த Google Drive Linkல் https://forms.gle/JUDrKzfetBDbbv7u9 25.03.2023ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
சிறப்புச் சிறுகதைகளுக்கான பரிசுகள்
சிறப்பு அறிவியல் சிறுகதைக்கு டாக்டர் காமேஸ்வரன் & டாக்டர் லலிதா காமேஸ்வரன் நினைவுப் பரிசு $250.00.
சிறப்பு வரலாற்றுச் சிறுகதைக்கு டாக்டர் சங்கரன் & முனைவர் சித்ரா சங்கரன் வழங்கும் பரிசு $250.00.
சிறப்புச் சிறுகதைகளுக்கான விதிகள்
போட்டியில் பங்கேற்போர் அறிவியல் கருவைக் கொண்ட கதைளையும் வரலாற்றுக் கருவைக் கொண்ட கதைகளையும் தனியாக அனுப்பலாம். கதைகள் சிங்கப்பூர்ச் சூழலில், நடப்பதாக அமைந்திருக்க வேண்டும். இந்தக் கதைகளும் 1,200 முதல் 1,500 வார்த்தைகளுக்குள் இருக்க வேண்டும். ஒருவர் இரண்டு கருக்களிலும் இரண்டு தனித்தனிக் கதைகளை அனுப்பலாம் அல்லது ஏதாவது ஒரு கருவில் ஒரு கதையை மட்டும் அனுப்பலாம். கதைகளை இந்த Google Drive Linkல் https://forms.gle/BVB1NPDtKWNHvkjH6 25.03.2023ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
சிறுகதைப் போட்டிகளுக்குப் பொதுவான விதிகள்
- சிங்கப்பூர்க் குடியுரிமை பெற்றவர்களும் நிரந்தரவாசிகளும் மட்டுமே போட்டியில் பங்கேற்கலாம்.
- எழுத்தாளர் கழகச் செயற்குழு உறுப்பினர்கள் போட்டிகளில் பங்கேற்க முடியாது. சிங்கப்பூர் எழுத்தாளர் கழகத்தின் மற்ற உறுப்பினர்களும் உறுப்பினர் அல்லாதவர்களும் பங்கேற்கலாம்.
- கதைகள் எழுதப்பட்டுள்ள பக்கங்களில் பெயரோ மற்ற விவரங்களோ எழுதக் கூடாது. பெயர், முகவரி, தொடர்பு எண், மின்னஞ்சல் முகவரி போன்றவற்றைத் தனியாக Google Driveவில் பதிவு செய்ய வேண்டும்.
- படைப்புகளைக் கூடியவரை கணினியில் அச்சிட்டுப் பதிவேற்ற வேண்டும். எழுதி வருடி (ஸ்கேன் செய்து) அனுப்பினால், கையெழுத்துப் புரியும்படி தெளிவாக இருக்க வேண்டும். அச்சிட்டாலும் எழுதினாலும் தாளின் ஒரு பக்கத்தில் மட்டுமே இருக்க வேண்டும். இரு பக்கங்களிலும் இருக்கக்கூடாது. கதைகளை Word அல்லது PDF வடிவத்தில் அனுப்பலாம்.
- சிறுகதை தன்னுடையதுதான் என்றும் வேறு எந்த ஊடகத்திலும் வெளியாகவில்லை என்றும் உறுதி தெரிவிக்கப்பட வேண்டும்.
- போட்டி குறித்த நடுவர்களின் முடிவே இறுதியானது.
- போட்டி முடிவுகள் ஏப்ரலில் நடக்க இருக்கும் முத்தமிழ் விழாவில் வெளியிடப்படும்.
- மேல் விவரங்களுக்கு எழுத்தாளர் கழகத் துணைத் தலைவர் திரு. சு. முத்துமாணிக்கத்தைத் (9675 3215) தொடர்பு கொள்ளலாம்.
(ஆ) எழுத்துச் செம்மல் சே.வெ. சண்முகம்-ருக்குமணி அம்மாள் நினைவு சிறுகதைப் போட்டி: பல்கலைக்கழக மாணவர்களுக்கும் தேசியக் கல்விக் கழக மாணவர்களுக்கும் இளையர்களுக்கும்
முதல் பரிசு $300; இரண்டாம் பரிசு $250; மூன்றாம் பரிசு $200. 3 ஊக்கப் பரிசுகள் ஒவ்வொன்றும் $125.
சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் தனது முத்தமிழ் விழாவை ஒவ்வோர் ஆண்டும் கொண்டாடி வருகிறது. இவ்வாண்டின் முத்தமிழ் விழாவை முன்னிட்டு, பல்கலைக்கழக மாணவர்களுக்கும் தேசியக் கல்விக் கழக மாணவர்களுக்கும் இளையர்களுக்கும் (18 வயது முதல் 25 வயது வரை) தனிப் பிரிவாகச் சிறுகதைப் போட்டி நடத்தப்படுகிறது. சிங்கையின் சிறந்த படைப்பாளிகளில் ஒருவரான எழுத்துச் செம்மல் அமரர் சே.வெ. சண்முகம் – அவரது மனைவி திருமதி ருக்குமணி அம்மாள் நினைவாக சிறுகதைப் போட்டி நடைபெறும். பரிசுகளை அவர்கள் குடும்பத்தினர் வழங்குகிறார்கள்.
சிறுகதைக்கான விதிகள்
இவ்வாண்டு அழகு எனும் கருப்பொருளைக் கொண்டு கதைகள் புனையப்பட வேண்டும். ஆனால் கதைகள் சிங்கப்பூர்ச் சூழலில், நடப்பதாக அமைந்திருக்க வேண்டும். இளையர்கள் எழுதும் கதைகள் 800 முதல் 1,000 வார்த்தைகளுக்குள் இருக்க வேண்டும். ஒருவர் அதிகபட்சமாக 3 கதைகளைப் பதிவேற்றம் செய்யலாம். பதிவு அஞ்சலிலோ இந்த Google Drive Linkல் https://forms.gle/tSidJYrtPJiD37tT6 25.03.2023ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
சிறுகதைப் போட்டிகளுக்கான விதிகள்
- சிங்கப்பூர்க் குடியுரிமை பெற்றவர்களும் நிரந்தரவாசிகளும் மட்டுமே போட்டியில் பங்கேற்கலாம்.
- பல்கலைக்கழக மாணவர்களுக்கும் தேசியக் கல்விக் கழக மாணவர்களுக்கும் வயது வரம்பு இல்லை. ஆனால் மாணவர் அல்லாத இளையர்கள் 18 முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும்.
- கதைகள் எழுதப்பட்டுள்ள பக்கங்களில் பெயரோ மற்ற விவரங்களோ எழுதக் கூடாது. பெயர், முகவரி, தொடர்பு எண், மின்னஞ்சல் முகவரி போன்றவற்றை கூகுள் படிவத்தில் பதிவு செய்ய வேண்டும்.
- படைப்புகளைக் கூடியவரை கணினியில் அச்சிட்டுப் பதிவேற்ற வேண்டும். எழுதி, வருடி (ஸ்கேன் செய்து) அனுப்பினால், கையெழுத்து புரியும்படி தெளிவாக இருக்க வேண்டும். அச்சிட்டாலும் எழுதினாலும் தாளின் ஒரு பக்கத்தில் மட்டுமே இருக்க வேண்டும். இரு பக்கங்களிலும் இருக்கக்கூடாது.
- சிறுகதை தன்னுடையதுதான் என்றும் வேறு எந்த ஊடகத்திலும் வெளியாகவில்லை என்றும் உறுதியளிக்க வேண்டும்.
- போட்டி குறித்த நடுவர்களின் முடிவே இறுதியானது.
- போட்டி முடிவுகள் 16.4.2023 அன்று முத்தமிழ் விழாவில் வெளியிடப்படும்.
மேல் விவரங்களுக்கு துணைத் தலைவரைத் (திரு. முத்து மாணிக்கம் 9675 3215) தொடர்பு கொள்ளலாம்.
முத்தமிழ் விழாப் போட்டிகளில் இதுவரை பரிசு பெற்றவர்கள் | |||||||
---|---|---|---|---|---|---|---|
ஆண்டு (போட்டி) |
முதல் பரிசு |
இரண்டாம் பரிசு |
மூன்றாம் பரிசு |
ஊக்கப் பரிசு |
ஊக்கப் பரிசு |
ஊக்கப் பரிசு |
|
2012 (சிறுகதை) |
நவமணி சுந்தரம் |
வ. ஹேமலதா |
கு.சீ. மலையரசி |
பனசை நடராசன் |
மாதங்கி |
பானுமதி வெங்கட்ரமணி |
|
2013 (சிறுகதை) |
ரா. சோமசுந்தரம் |
வ. ஹேமலதா |
ரமா சுரேஷ் |
ப. அழகுநிலா |
விசயபாரதி இந்துமதி |
இராமமூர்த்தி மகேஷ்குமார் |
|
2014 (சிறுகதை) |
விசயபாரதி இந்துமதி |
வ. ஹேமலதா |
பிரதீபா |
ரா. சோமசுந்தரம் |
தமிழ்ச்செல்வி |
ப. அழகுநிலா |
|
2015 (சிறுகதை) |
மா. அன்பழகன் |
பா. அழகுநிலா |
சுஜா செல்லப்பன் |
ரமா சுரேஷ் |
கிருத்திகா சிதம்பரம் |
வி. ஹேமலதா |
|
2016 (குறுநாவல்) |
பிரேமா மகாலிங்கம் |
வ. ஹேமலதா |
கிருத்திகா சிதம்பரம் |
சுஜா செல்லப்பன் |
மில்லத் அஹ்மத் |
விசயபாரதி இந்துமதி |
|
2017 (சிறுகதை) |
பிரேமா மகாலிங்கம் |
இரா. தமிழ்ச்செல்வி |
கிருத்திகா சிதம்பரம் |
அபிராமி சுரேஷ் |
மில்லத் அஹ்மது |
வ. ஹேமலதா |
|
2018 (சிறுகதை) |
மணிமாலா மதியழகன் |
இ. கலைவாணி |
சி. அரசு வித்யா சங்கரி |
அழகு சுந்தரம் |
மில்லத் அஹ்மது |
சொக்கலிங்கம் அரவிந்த் |
|
2018 (குழந்தைப் பாடல்) |
தவமணி வேலாயுதம் |
கோ. இளங்கோவன் |
ப. அழகுநிலா |
கணேசுகுமார் பொன்னழகு |
மாசிலாமணி அன்பழகன் |
சொக்கலிங்கம் அரவிந்த் |
|
2019 (சிறுகதை) |
மணிமாலா மதியழகன் |
அபிராமி சுரேஷ் |
மில்லத் அஹ்மது |
இரா. தமிழ்ச்செல்வி |
பிரேமா மகாலிங்கம் |
கு.சீ. மலையரசி |
|
2020 (மரபுக்கவிதை) |
பிச்சினிக்காடு இளங்கோ |
மாசிலாமணி அன்பழகன் |
பொன். கணேஷ்குமார் |
தவமணி வேலாயுதம் |
மில்லத் அஹ்மது |
சுபாஷினி |
|
2020 (சிறுகதை) |
அபிராமி குணசேகரன் |
மில்லத் அஹ்மது |
மணிமாலா மதியழகன் |
வித்யா அருண் |
ரெ. விஜயலெட்சுமி |
சிவக்குமார் KB |
|
2021 (சிறுகதை) |
ஹேமலதா |
பிரேமா மகாலிங்கம் |
இராஜராஜன் |
மில்லத் அஹ்மது |
மணிமாலா மதியழகன் |
ஷோபா குமரேசன் |
|
2021 (சிறுகதை) |
முருகன் கிருஷ்ணன் |
சித்ரா ரமேஷ் |
பாஸ்கரன் கங்கா |
மில்லத் அஹ்மது |
வித்யா அருண் |
இராசராசன் ஹேமலதா |