கவியரசு கண்ணதாசன் விருதுக்குப் பரிந்துரை செய்க

     kannadaasan

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் ஆண்டுதோறும் நடத்தும் கவியரசு கண்ணதாசன் விழாவில் அவர் பெயரில் விருது வழங்கி வருகிறது.  கண்ணதாசன் ஒரு கவிஞர்; சிறுகதை, நாவல், கட்டுரை, நாடக எழுத்தாளர்; திரைக்கதை வசனம் எழுதியவர்; பாடலாசிரியர் என பலதிறன் படைத்தவர்; அந்தத் துறைகளிலே முத்திரை பதித்தவர்.

அதனால் மேற்குறிப்பிட்ட துறைகளில் குறைந்தது ஏதாவது ஒன்றில் சிறப்பாகத் திறனை வெளிக்காட்டி வரும் ஒருவர் ஆண்டுதோறும் தெரிவு செய்யப்பட்டு, அவருக்கு விருது வழங்கப்படுகிறது. அது அவர்களுக்கு மேலும் ஊக்கமளிப்பதாக இருக்கும் என்று எழுத்தாளர் கழகம் நம்புகிறது. மேலும் இந்த விருதுத் தேர்வில் பொதுமக்களும் பங்களிக்கும் வகையில் ஒரு முன்னோடி முயற்சியை எழுத்தாளர் கழகம் எடுத்துள்ளது.

ஆகவே கவியரசு கண்ணதாசன் விருதுக்குத் தகுதியானவர்களைப் பரிந்துரை செய்யும்படி கவிஞர்கள், எழுத்தாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள், கலைஞர்கள் உள்ளிட்ட பொது மக்கள் அனைவரையும் எழுத்தாளர் கழகம் கேட்டுக் கொள்கிறது. பரிந்துரை செய்வதற்கான விதிகள் வருமாறு:

  1. விருதுக்குப் பரிந்துரைக்கப்படுபவர் கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை, நாடகம், திரைக்கதை வசனம் (தொலைக்காட்சி உள்பட), பாடல் ஆகிய ஏழு துறைகளில் எதாவது ஒன்றில் சிறந்த எழுத்துத் திறன் பெற்றவராக விளங்க வேண்டும்.
  2. விருதுக்குப் பரிந்துரைக்கப்படுபவர் 1980 ஜூன் 24ஆம் தேதிக்கும் 2000 ஜூன் 24ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டும். கண்ணதாசன் பிறந்த நாளான ஜூன் 24ஆம் தேதியுடன் வயது கணக்கிடப்படும்.
  3. அவர் சிங்கப்பூர்க் குடியுரிமை உள்ளவராகவோ, நிரந்தரவாசியாகவோ இருக்க வேண்டும்.
  4. பரிந்துரை செய்பவரும் சிங்கப்பூர்க் குடியுரிமை உள்ளவராகவோ, நிரந்தரவாசியாகவோ இருக்க வேண்டும். ஆனால், அவர் 40 வயதிற்குக் கீழுள்ளவராக இருக்க வேண்டியதில்லை.
  5. விருதுக்குப் பரிந்துரை செய்யப்படுபவரின் தனித் திறன்கள், அவர் எந்தத் துறையில் சிறப்புப் பெற்றுள்ளார் என்ற விவரங்களுடன் அவரைப் பரிந்துரை செய்வதற்கான காரணங்களையும் பரிந்துரை செய்பவர் தெரிவிக்க வேண்டும்.
  6. ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களுக்கு வேண்டுமானாலும் பரிந்துரை செய்யலாம். ஆனால் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாகப் பரிந்துரை செய்ய வேண்டும்.
  7. பரிந்துரைக்கப்படுபவர் நூல் வெளியிட்டிருக்க வேண்டிய அவசியமில்லை.
  8. பரிந்துரைக்கப்படுபவர்கள், பரிந்துரை செய்பவர் ஆகியோரின் பெயர், முகவரி, தொடர்பு எண்கள், மின்னஞ்சல் முகவரி ஆகியவை கட்டாயம் தெரிவிக்கப்பட வேண்டும்.
  9. பரிந்துரைகளை [email protected] அல்லது [email protected] எனும் மின்னஞ்சல் முகவரிக்கோ, BLK 701 # 11-325, West Coast Road, Singapore 120701 எனும் அஞ்சல் முகவரிக்கோ 31-10-2020ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
  10. கிடைக்கும் பரிந்துரைகளுடன் விருதுத் தேர்வுக் குழு தனது சொந்தப் பரிந்துரைகளையும் பரிசீலித்து விருதுக்குரியவரைத் தெரிவு செய்யும். விருதுத் தேர்வுக் குழுவின் பரிந்துரையே இறுதியானதாக இருக்கும்.
  11. அவருக்கு வரும் நவம்பர் 22ஆம் தேதி நடைபெறும் கவியரசு கண்ணதாசன் விழாவில் விருது வழங்கப்படும்.

மேல் விவரங்களுக்கு: 

திரு . சுப. அருணாசலம், தலைவர். சி.த.எ.க. (93221138)

திருமதி கிருத்திகா, செயலாளர், சி.த.எ.க. (90602644)