தமிழவேள் விருது
தமிழவேள் கோ.சாரங்கபாணி (1903 – 1974)
தமிழவேள் கோ.சாரங்கபாணி தமிழ்நாட்டின் தஞ்சை மாவட்டத்தில் 20-04-1903ல் பிறந்து தமது 21ஆம் வயதில் 1924ல் சிங்கப்பூர் வந்தார். சிங்கப்பூரில் தமிழர் திருநாள் கண்டவர். சிங்கப்பூரில் தமிழ் பாடமொழியாகக் காரணமாயிருந்தார். அப்போதைய மலாயா சிங்கப்பூரில் பல வகையிலும் தமிழ்த் தொண்டாற்றினார். பத்திரிக்கைத் துறையில் பணியாற்றினார்.
தமிழவேள் 1935ல் தமிழர் சீர்திருத்தச் சங்கத்தின் வெளியீடாக “தமிழ் முரசை” வார இதழாகத் தொடங்கினார். 1936ல் சங்கம் தமிழ் முரசைத் தமிழவேளிடமே விற்றுவிட்டது. 1937ல் தமிழ்முரசு நாளிதழ் ஆனது. எழுத்தாளர்களை ஊக்குவிக்க எழுத்தாளர் பேரவை, மாணவர் மணிமன்ற மலர், தமிழ் இளைஞர் மணிமன்றம் உருவாக்கினார். தவத்திரு குன்றக்குடி அடிகளார் 1955ல் கோலாலம்பூர் அருள்நெறி மாநாட்டில் இவருக்கு “தமிழவேள்” எனும் சிறப்புப் பட்டமளித்துப் பாராட்டினார்.
ஆண்டுதோறும் முத்தமிழ் விழாவில் வழங்கப்படும் தமிழவேள் விருது சிங்கப்பூர் தமிழ் இலக்கியத்துறையின் ஒரு முக்கியவிருதாகக் கருதப்படுகிறது. இவ்விருது சிங்கப்பூரில் தமிழ் வளர்ச்சிக்குப் பெரிதும் பாடுபட்ட தமிழவேள் கோ. சாரங்கபாணி அவர்களின் பெயரால் வழங்கப்படுவது பெரும் சிறப்பாகும். ஒவ்வோர் ஆண்டும் முத்தமிழ் விழாவின் போது தமிழ் தொண்டாற்றும் ஒரு சிங்கப்பூரர் தேர்ந்தெடுக்கப்பட்டு இவ்விருதின் மூலம் கௌரவிக்கப்படுகிறார். 1988ம் ஆண்டு முதல் இவ்விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
தமிழவேள் விருது 2022

படவிளக்கம்: சிறப்பு விருந்தினரும் புக்கிட் பாத்தோக் தனித் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான திரு. முரளி பிள்ளை, தமிழவேள் விருதைத் திரு. ராம. நாராயணசாமிக்கு அறிவித்துச் சான்றிதழையும் வழங்குகிறார். அருகில் எழுத்தாளர் கழகச் செயலாளர் திருவாட்டி கிருத்திகாவும் தலைவர் திரு. நா. ஆண்டியப்பனும்.
ஆண்டு | தமிழவேள் விருது பெற்றவர்கள் |
1988 | தமிழறிஞர் மெ. சிதம்பரம் |
1989 | கவிஞர் சிங்கை முகிலன் |
1989 | கவிவாணர் ஐ. உலகநாதன் |
1989 | திரு. அ. நா. மொய்தீன் |
1996 | திரு. சே.வெ. சண்முகம் |
1997 | கவிஞர் ந. பழநிவேலு |
1998 | திரு. பி. கிருஷ்ணன் |
1999 | கவிஞர் க.து.மு. இக்பால் |
2000 | திரு. மா. இளங்கண்ணன் |
2001 | திரு. ஜே. எம். சாலி |
2001 | கவிஞர் முரசு நெடுமாறன் (வெள்ளி விழா) |
2002 | முனைவர் வீரமணி |
2003 | பாத்தென்றல் முருகடியான் |
2003 | திரு. வை. திருநாவுக்கரசு |
2004 | திரு. இராம. கண்ணபிரான் |
2006 | கவிஞரேறு அமலதாசன் |
2007 | பாத்தேறல் இளமாறன் |
2008 | வெண்பாச் சிற்பி இக்குவனம் |
2009 | பாத்தூரல் முத்துமாணிக்கம் |
2010 | திருமதி பார்வதி பூபாலன் |
2010 | முனைவர் சுப. திண்ணப்பன் (பவள விழா) |
2011 | கவிஞர் திரு. பெ. திருவேங்கடம் |
2012 | திரு. எஸ். எஸ். சர்மா |
2013 | திரு. பொன். சுந்தரராசு |
2014 | ஏ.பி.இராமன் |
2015 | வி.ஆர்.பி.மாணிக்கம் |
2016 | கமலாதேவி அரவிந்தன் |
2017 | செ.ப. பன்னீர்செல்வம் |
2018 | ச. வரதன் |
2019 | எ.கே. நாராயணன் |
2020 | கடையநல்லூர் ஜமீலா (N .M . சம்சுதீன்) |
2021 | விடுதலைக் கவி வை. சுதர்மன் |