எஸ் ஜி 60 கருத்தரங்கம் 7.09.2025

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம்

Association of Singapore Tamil Writers

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு தலைமைத்துவ மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதன் புதிய தலைவராக துணைத் தலைவராக இருந்த திரு. சு.முத்துமாணிக்கம் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். கடந்த 29.06.2025 ஞாயிற்றுக்கிழமை காலை சிங்கப்பூர் சிண்டா உள்ளரங்கத்தில் நடைபெற்ற 24ஆவது பொதுக்கூட்டத்தில் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். 49 ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் கழகத்தில், தற்போதுள்ள 123 உறுப்பினர்களில் 50 உறுப்பினர்கள் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

சிங்கப்பூர்த் தமிழ்  எழுத்தாளர் கழகத்தைச் சிறப்பான உயரத்திற்குக் கொண்டு சென்றுள்ள திரு நா.ஆண்டியப்பன் அவர்கள், புதிய செயலவையில், உடனடி முன்னாள் தலைவராக பொறுப்பேற்று அடுத்த 2 ஆண்டுகளுக்கு  புதிய செயலவைக்கு வழிகாட்டியாக விளங்குவார்.

புதிய துணைத் தலைவராக திரு. இரா.அன்புச்செல்வனும் உதவித் தலைவர்களாக திருவாட்டி மலையரசி சீனிவாசன், திரு. கோ.இளங்கோவன் ஆகியோரும் பொறுப்பேற்றுள்ளனர். திருவாட்டி பிரேமா மகாலிங்கம் செயலாளராகவும், திருவாட்டி மணிமாலா மதியழகன் பொருளாளராகவும் நீடிக்கின்றனர். கழகத்தின் துணைச் செயலாளராக திரு. பாலசுப்ரமணியன் இரமேஷும் உதவிப் பொருளாளராக திரு. ந.சரவணனும் நியமிக்கப்பட்டுள்ளனர். செயலவை உறுப்பினர்கள் திருவாட்டி பிரதீபா வீரபாண்டியன், திருவாட்டி ஷோபா குமரேசன் இருவரும் நீடிக்கின்றனர். திரு. சரவணபவன் ஆதவன், திருவாட்டி எழிலி கருணாகரன், திருவாட்டி அனுராதா மற்றும் திரு. சிவக்குமார் ஆகியோர் புதிதாகச் செயலவையில் இணைந்துள்ளனர். இளையர் பிரிவுத் தலைவராக செல்வி கிருஷ்மிதா ஷிவ்ராம் தொடர்கிறார்.

எங்களது நிகழ்ச்சிகள்

முத்தமிழ் விழா
கம்பன் விழா
கதைக்களம்
மு.கு.இராமச்சந்திரா
புத்தகப் பரிசு
கவியரசு
கண்ணதாசன் விழா
இணையதள முகவரி
www.Singaporetamilwriters.com

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தில்

தலைமைத்துவ மாற்றம்