தமிழவேள் விருது 2023

தமிழவேள் கோ.சாரங்கபாணி (1903 – 1974)

தமிழவேள் கோ.சாரங்கபாணி தமிழ்நாட்டின் தஞ்சை மாவட்டத்தில் 20-04-1903ல் பிறந்து தமது 21ஆம் வயதில் 1924ல் சிங்கப்பூர் வந்தார். சிங்கப்பூரில் தமிழர் திருநாள் கண்டவர். சிங்கப்பூரில் தமிழ் பாடமொழியாகக் காரணமாயிருந்தார். அப்போதைய மலாயா சிங்கப்பூரில் பல வகையிலும் தமிழ்த் தொண்டாற்றினார். பத்திரிக்கைத் துறையில் பணியாற்றினார்.

தமிழவேள் 1935ல் தமிழர் சீர்திருத்தச் சங்கத்தின் வெளியீடாக “தமிழ் முரசை” வார இதழாகத் தொடங்கினார். 1936ல் சங்கம் தமிழ் முரசைத் தமிழவேளிடமே விற்றுவிட்டது. 1937ல் தமிழ்முரசு நாளிதழ் ஆனது. எழுத்தாளர்களை ஊக்குவிக்க எழுத்தாளர் பேரவை, மாணவர் மணிமன்ற மலர், தமிழ் இளைஞர் மணிமன்றம் உருவாக்கினார். தவத்திரு குன்றக்குடி அடிகளார் 1955ல் கோலாலம்பூர் அருள்நெறி மாநாட்டில் இவருக்கு “தமிழவேள்” எனும் சிறப்புப் பட்டமளித்துப் பாராட்டினார்.

ஆண்டுதோறும் முத்தமிழ் விழாவில் வழங்கப்படும் தமிழவேள் விருது சிங்கப்பூர் தமிழ் இலக்கியத்துறையின் ஒரு முக்கியவிருதாகக் கருதப்படுகிறது. இவ்விருது சிங்கப்பூரில் தமிழ் வளர்ச்சிக்குப் பெரிதும் பாடுபட்ட தமிழவேள் கோ. சாரங்கபாணி அவர்களின் பெயரால் வழங்கப்படுவது பெரும் சிறப்பாகும். ஒவ்வோர் ஆண்டும் முத்தமிழ் விழாவின் போது தமிழ் தொண்டாற்றும் ஒரு சிங்கப்பூரர் தேர்ந்தெடுக்கப்பட்டு இவ்விருதின் மூலம் கௌரவிக்கப்படுகிறார். 1988ம் ஆண்டு முதல் இவ்விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன....

ஆண்டு தமிழவேள் விருது பெற்றவர்கள்

1988 தமிழறிஞர் மெ. சிதம்பரம்

1989 கவிஞர் சிங்கை முகிலன்

1989 கவிவாணர் ஐ. உலகநாதன்

1989 திரு. அ. நா. மொய்தீன்

1996 திரு. சே.வெ. சண்முகம்

1997 கவிஞர் ந. பழநிவேலு

1998 திரு. பி. கிருஷ்ணன்

1999 கவிஞர் க.து.மு. இக்பால்

2000 திரு. மா. இளங்கண்ணன்

2001 திரு. ஜே. எம். சாலி

2001 கவிஞர் முரசு நெடுமாறன்

(வெள்ளி விழா)

2002 முனைவர் வீரமணி

2003 பாத்தென்றல் முருகடியான்

2003 திரு. வை. திருநாவுக்கரசு

2004 திரு. இராம. கண்ணபிரான்

2006 கவிஞரேறு அமலதாசன்

2007 பாத்தேறல் இளமாறன்

2008 வெண்பாச் சிற்பி இக்குவனம்

2009 பாத்தூரல் முத்துமாணிக்கம்

2010 திருமதி பார்வதி பூபாலன்

2010 முனைவர் சுப. திண்ணப்பன்

(பவள விழா)

ஆண்டு தமிழவேள் விருது பெற்றவர்கள்

2011 கவிஞர் திரு. பெ. திருவேங்கடம்

2012 திரு. எஸ். எஸ். சர்மா

2013 திரு. பொன். சுந்தரராசு

2014 ஏ.பி.இராமன்

2015 வி.ஆர்.பி.மாணிக்கம்

2016 கமலாதேவி அரவிந்தன்

2017 செ.ப. பன்னீர்செல்வம்

2018 ச. வரதன்

2019 எ.கே. நாராயணன்

2020 கடையநல்லூர் ஜமீலா

(N .M . சம்சுதீன்)

2021 விடுதலைக் கவி வை. சுதர்மன்

2022 ராம நாராயணசாமி

2023 சாமிக்கண்ணு

2024 தவமணி