கவியரசு கண்ணதாசன் பாட்டுத் திறன் போட்டி

கவியரசு கண்ணதாசன் பாட்டுத் திறன் போட்டி 2 பிரிவுகளாக நடத்தப்படும்

6 வயது முதல் 14 வயது வரை உள்ளவர்களுக்கு ஒரு பிரிவாகவும், 14 வயதிற்கு மேலுள்ளவர்களுக்கு ஒரு பிரிவாகவும் போட்டி நடைபெறும். மாணவர்களும் பொது மக்களும் இதில் பங்கேற்கலாம். கவியரசு கண்ணதாசன் இயற்றிய திரைப்பாடல்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இந்தப் பட்டியலில் ஒவ்வொரு பிரிவுக்கும் உள்ள 60க்கு மேற்பட்ட பாடல்களில் ஏதாவது ஒரு பாடலைத் தேர்வு செய்து பாட வேண்டும்.

இந்தப் போட்டியில் ஆண்கள் ஆண்குரல் பாடல்களையும் பெண்கள் பெண்குரல் பாடல்களையும் பாட வேண்டும். மாற்றிப் பாடக்கூடாது. அந்தப் பட்டியலில் இல்லாத கண்ணதாசன் பாடல்களைப் பாட, எழுத்தாளர் கழகத்திடம் தெரிவித்து முன் அனுமதி பெற வேண்டும்.

பாடலைப் பின்னணி இசையில்லாமல் பாட வேண்டும். தேர்வுச் சுற்றுக்கு முழுப் பாடலையும் பாட வேண்டியதில்லை. பல்லவி, அனுபல்லவி மற்றும் முதலாவது சரணத்தை மட்டும் பாடினால் போதும்.

சிங்கப்பூரில் பணிபுரியும்/வசிக்கும்  (அடையாள அட்டை அல்லது வேலை அனுமதிச் சீட்டு உள்ளவர்கள்)

யாரும் போட்டியில் பங்கேற்கலாம்   

அமரர் சுப அருணாசலம் நினைவு சூழலுக்குப் பாடல் எழுதும் போட்டி

 16 வயதுக்கு மேற்பட்ட சிங்கப்பூர்க் குடியுரிமை உள்ளவராகவோ அல்லது நிரந்தரவாசியாகவோ இருக்க வேண்டும்.

 சிங்கப்பூர்ச் சூழலில் ஒருவர் பாடுவதாகப் பாடல் அமைந்திருக்க வேண்டும்.

ஒரு பல்லவி மற்றும் நான்கு சரணங்கள் இருக்க வேண்டும். ஒவ்வொன்றும் 4 வரிகளில்,

மொத்தம் 20 வரிகள் மட்டுமே இருக்க வேண்டும்.