|
கவிச்சோலை |
|
சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றுதான் கவிச்சோலை. |
|
இந்தக் கவிச்சோலை நிகழ்வினை சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் பெக் கியோ சமூக மன்ற இந்திய நற்பணிச் செயற்குழுவுடன் இணைந்து பெக் கியோ சமூக மன்றத்தில் மாதந்தோறும் நடத்தி வருகிறது.
.
|
|
கவிச்சோலை நிகழ்வின் முக்கிய நோக்கம்,
• கவிஞர்களுக்குக் களம் அமைத்துக் கொடுப்பது.
• அதன் மூலம் புதிய இளம் கவிஞர்களை அடையாளங்காட்டுவது.
• ஏற்கனவே எழுதிவரும் கவிஞர்களை அவர்களின் திறமைகளை மேலும் வளர்த்துக் கொள்ள உதவுவது.
|
|
கவிச்சோலை வலைப்பக்க முகவரி: http://kavicholai-astw.blogspot.com
|
|
இந்தச் சிறப்புமிகு நிகழ்வு பொதுவாக ஒவ்வொரு மாதமும் முதல் சனிக்கிழமை நடத்தப்படுகிறது. |
|
கவிச்சோலைப் போட்டிக்கவிதைக்கான தலைப்பு ஒரு வாரத்துக்கு முன் கவிச்சோலை வலைப்பக்கத்தில் வெளியிடப்படுகிறது.தமிழ்முரசு பத்திரிகையிலும் அது பற்றிய அறிவிப்பினைக் காணலாம்.கவிச்சோலைக் கவிஞர்கள் தாங்கள் படைத்த கவிதைகளை கவிச்சோலை வலைப் பக்கத்தில் கவிச்சோலையின் முடிவில் பின்னூட்டங்களாகப் பதிவு செய்ய வரவேற்கப் படுகிறார்கள்.அப்படிச் செய்தால் கவிதைகள் கவிச்சோலையில் கலந்து கொள்ள முடியாதவர்களையும் சென்றடையும். |
|
அனைவரும் வருக! தமிழ்த்தேன் பருக!! |