முத்தமிழ் விழா 2010 - பொதுப்பிரிவு போட்டிகள், மாணவர் போட்டிகள் பற்றிய அறிவிப்பைப் பார்த்துவிட்டீர்களா?... மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள அதற்கான இணையப்பக்க லிங்க்கைச் சொடுக்குங்கள்..!!!!
 
Home
About us
Events
Literature
Feed Back
Site Map
Counter Stats

Myspace Layouts
முத்தமிழ் விழா
கழகம் ஆண்டு தோறும் நடத்துகிற முத்திரை விழாதான் முத்தமிழ் விழா. விழாவிற்கு சிறப்பு விருந்தினராக சிங்கப்பூர் அரசின் முக்கியப் பிரமுகர் ஒருவரை அழைப்பது வழக்கப் படுத்தப்பட்டுள்ளது. விழாவிற்கு சிறப்புப் பேச்சாளர்களாக தமிழறிஞர்களை அழைத்து வந்து சிறப்புரைகளை வழங்கச்செய்வது தமிழன்னைக்குக் கழகம் அணிவிக்கிற மகுடம்.
விழாவின் சிறப்பு
இவ்விழாவின் சிறப்பு எல்லா நிலை மாணவர்களும் பங்கேற்கும் விதமாக பலப் பல போட்டிகளையும் நடத்தி அவர்களின் திறமைகளை அவர்களுக்கு அடையாளம் காட்டுவதும், அவர்களுக்குத் தன்னம்பிக்கையை ஊட்டுவதும் ஆகும். போட்டிகளில் மாணவர்கள் ஆவலுடன் பங்கேற்கின்றனர். மாறுவேடப்போட்டி, பேச்சுப்போட்டி, புதிர்போட்டி, கதை சொல்லும் போட்டி எனப் போட்டிகள் அனைத்தும் பேச்சுத்தமிழை ஊக்குவிக்கும் கல்வி அமைச்சின் திட்டத்திற்கு ஏற்ப நடத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இப்போட்டிகளை நடத்த உமறுப் புலவர் தமிழ் மொழி நிலையம் இடவசதி அளித்து உதவி வருகிறது.
சிறுகதை, கவிதைப் போட்டிகள்
வளரும் எழுத்தாளர்களுக்கு ஊக்கமளிக்கும் நோக்கத்தில் பொதுப்பிரிவினர்க்கு ஆண்டு தோறும் சிறுகதை, கவிதைப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. பல புதிய எழுத்தாளர்கள், மற்றும் கவிஞர்கள் இந்தப்போட்டிகளினால் உருவாகியிருக்கிறார்கள் என்று சொன்னால் அது மிகையில்லை. எழுத்துச் செம்மல் சே.வெ. சண்முகம் அவர்கள் நினைவாக இப்போட்டிகள் நடத்தப்படுகின்றன. அமரர் சே.வெ. சண்முகம் அவர்களின் குடும்பத்தினர் இப்போட்டிகளுக்கான பரிசுகளை வழங்கி வருகிறார்கள்.

" கவிச்சோலை வலைப்பக்கத்திற்குச் செல்ல இங்கே கிளிக் செய்யவும்
கண்ணதாசன் பாட்டுத்திறன் போட்டி- 2009
முத்தமிழ் விழா - 10 மாணவர் போட்டிகள்
முத்தமிழ் விழா 10 - பொதுப்பிரிவு போட்டிகள்
மு.கு.இராமச்சந்திரா நினைவு புத்தகப் பரிசுப் போட்டி 2010
Advertisement1
Advertisement2