முத்தமிழ் விழா 2010 - பொதுப்பிரிவு போட்டிகள், மாணவர் போட்டிகள் பற்றிய அறிவிப்பைப் பார்த்துவிட்டீர்களா?... மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள அதற்கான இணையப்பக்க லிங்க்கைச் சொடுக்குங்கள்..!!!!
 
Home
About us
Events
Literature
Feed Back
Site Map
Counter Stats

Myspace Layouts
முத்தமிழ் விழா 2010 - மாணவர் போட்டிகள்
முத்தமிழ் விழாவை முன்னிட்டு மாணவர்களுக்குப் பல்வேறு போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.பாலர் பள்ளி,தொடக்கநிலை 1,2 மாணவர்களுக்கு மாறுவேடப் போட்டியும்,தொடக்கநிலை 3,4 மாணவர்களுக்குக் கதை சொல்லும் போட்டியும், தொடக்கநிலை 5,6 மாணவர்களுக்குப் பேச்சுப்போட்டியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.பாலர் பள்ளி தவிர அனைத்துத் தொடக்கநிலை மாணவர் போட்டிகளுக்கும் அந்தந்தப் பள்ளி மூலமே பதிவு செய்ய வேண்டும்.அனைத்துத் தொடக்கப் பள்ளிகளுக்கும் கடிதங்களும்,பதிவுப் படிவங்களும் அனுப்பி வைக்கப்ப்ட்டுள்ளன.
போட்டி படிவம் - PAP. PCF பாலர் பள்ளிகளில் படிக்கும் பிள்ளைகளின் பெற்றோர் நேரடியாகப் பதிவு செய்யலாம்.அவர்கள் இந்த இணயத்தளத்தில் இருந்து படிவத்தைப் பதவிறக்கம் செய்து அதனை நிரப்பி அனுப்பி வைக்கலாம்.பதவிறக்கம் செய்ய வேண்டிய PDF படிவம் . போட்டி விதிகள் :- விதிகள் PDF .
பல பாலர் பள்ளிகளுக்கும் கடிதங்களும், பதிவுப் படிவங்களும் அனுப்பி வைக்கப்ப்ட்டுள்ளன. சாரத பாலர் பள்ளி,சரஸ்வதி பாலர் பள்ளி,சரஸ்வதி தர்ம முனீஸ்வரன் பாலர் பள்ளி,வித்யா பாலர் பள்ளி,கிண்டர்லேண்ட் பாலர் பள்ளி,ஸ்ரீசத்யசாய் பாலர் பள்ளி,கிரைஸ்ட்சர்ச் பாலர் பள்ளி,கல்சா பாலர் பள்ளி ஆகியவை அவற்றில் அடங்கும்.அந்தப் பாலர் பள்ளிகளின் மாணவர்கள் தங்கள் பள்ளிகளின் மூலமாகப் பதிவு செய்ய வேண்டும்.
மேல் விவரங்களுக்கு: நா. ஆண்டியப்பன் (தலைவர்) - 97849105 சுப. அருணாசலம் (செயலாளர்) - 93221138 இராம. வயிரவன்(து.செயலாளர்) - 93860497 சித்ரா ரமேஷ் (பொருலாளர்) - 97733186 ஆகியோரைத் தொடர்பு கொள்ளலாம்.
போட்டி நடைபெறும் நாள்: போட்டிகள் வரும் 07 மார்ச் 2010 ஞாயிற்றுக்கிழமை காலை மணி 8:30 முதல் பிற்பகல் மணி 1:00 வரை உமறுப்புலவர் தமிழ் மொழி நிலையத்தில் நடைபெறும். அதன் புதிய முகவரி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.  
போட்டி நடைபெறும் இடம்: Umar Pulavar Tamil Language Centre, 508 Victoria Street Next to ICA Building, Nearer to Lavender MRT.



" கவிச்சோலை வலைப்பக்கத்திற்குச் செல்ல இங்கே கிளிக் செய்யவும்
கண்ணதாசன் பாட்டுத்திறன் போட்டி- 2009
முத்தமிழ் விழா - 10 மாணவர் போட்டிகள்
முத்தமிழ் விழா 10 - பொதுப்பிரிவு போட்டிகள்
மு.கு.இராமச்சந்திரா நினைவு புத்தகப் பரிசுப் போட்டி 2010
Advertisement1
Advertisement2