கதைக்களம்
சிங்கப்பூரில் வளரும் எழுத்தாளர்களுக்குக் களம் அமைத்துக் கொடுக்கும் வகையில் தேசிய நூலகத்தோடு இணைந்து ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணி முதல் 6.00 மணி வரை தேசிய நூலக வாரிய கட்டிடத்தில் இந்த கதைக்களம் நிகழ்ச்சியை சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் நடத்தி வருகிறது.
கதைக்களம் என்பது ஒரு பயிற்சிப் பட்டறை. இந்தப்பயிற்சிப் பட்டறையில் தேறியவர்கள் சிறந்த எழுத்தாளர்களாக உருவாகும் வாய்ப்பு உள்ளது
இந்த நிகழ்ச்சியின் வழி சிறுகதை எழுதுவதற்கான பயிற்சியும், தேர்ந்தெடுக்கப்பட்ட கதை மற்றும் நூல்களுக்கு பரிசும் வழங்கப்பட்டு வருகிறது.
கதைக்களத்தில் இந்தியாவிலிருந்து வரும் எழுத்தாளர்கள், உள்ளூர் எழுத்தாளர்கள், தமிழ் அறிஞர்கள் ஆகியோரது பேச்சை கேட்கும் வாய்ப்புண்டு. இப்பொழுது கதைக்களம் பற்றி சிங்கப்பூரில் எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது.
வரும் ஆண்டுகளில் இன்னும் அதிகமானோரைக் கதைக்களம் ஈர்க்கும் என நம்புகிறோம்.
ப்
போட்டியில் பங்கு பெறுவோர், தங்கள் படைப்புகளைக் கணினியில் அச்சிட்டு https://forms.gle/VdpmyEfdVas5wtMLA
என்ற கூகுள் மின்னியில் படிவத்தின் வழி பதிவேற்றம் செய்யவும்.
உதாரணம்:
கோப்பின் பெயர்: ‘உண்மை’