ஆனந்த பவன் மு.கு. இராமச்சந்திரா
நினைவு புத்தகப் பரிசு 2023
சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் 2010ஆம் ஆண்டு முதல் நடத்தும் ஆனந்த பவன் அமரர் மு.கு. இராமச்சந்திரா நினைவு புத்தகப் பரிசுப் போட்டி, இவ்வாண்டு வழக்கம்போல் நடைபெற இருக்கிறது. அமரர் மு.கு. இராமச்சந்திரா நினைவு நாளை ஒட்டி வரும் ஆகஸ்ட் மாதம் பரிசளிப்பு விழா நடைபெறும்.
சிறுகதை, கவிதை, கட்டுரை, நாவல்
என நான்கு துறைகளுக்குச் சுழல் முறையில் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த மூன்று ஆண்டுகளில் முதல் பதிப்பாகப் பதிப்பிக்கப்பட்ட நூல்களின் 4 படிகளை குடியுரிமை அல்லது நிரந்தரவாசத் தகுதி பெற்ற எழுத்தாளர்கள் இந்தப் போட்டிக்கு அனுப்பி வைக்க வேண்டும். ஒரே துறையில் பரிசு பெற்றவர்கள் மீண்டும் கலந்துகொள்ள முடியாது என்பதை நினைவில் கொள்ளவும். மற்ற துறைகளில் பரிசு பெற்றவர்கள் இதில் கலந்து கொள்ளலாம்.
நூல்களை அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி :
Association of Singapore Tamil Writers, BLK 723 # 13-149, Yishun St 71, Singapore 760723.
அல்லது செயலாளர் பிரேமாவிடம் (HP No. 91696996)
Aaria Creations, 32 Upper Dickson Road, Singapore 207491 எனும் முகவரியில் நேரிலும் கொடுக்கலாம்.
சிங்கப்பூர், மலேசியா, இந்தியா ஆகிய மூன்று நாடுகளில் இருந்து மூன்று நடுவர்கள் சிறந்த நூலைத் தெர்ந்தெடுக்க உதவுவார்கள். அந்த நூலுக்கு 3,000 வெள்ளி ரொக்கமும் சான்றிதழும் வழங்கப்படும். போட்டிக்கான விதிகளையும் விண்ணப்பப் படிவத்தையும் www.singaporetamilwriters.com எனும் எழுத்தாளர் கழகத்தின் இணையத் தளத்திலிருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பரிசளிப்புக்கான விதிமுறைகள்:

 1. பரிசுத் தேர்வுக்கு நூல்களை அனுப்பும் நூலாசிரியர்கள் சிங்கப்பூர்க் குடியுரிமை பெற்றவராகவோ நிரந்தரவாசத் தகுதி பெற்றவராகவோ இருக்க வேண்டும்.

 2. பரிசுத் தேர்வுக்கு நூல்களை அனுப்பும் நூலாசிரியர்கள் 2019, 2020, 2021 ஆகிய மூவாண்டுக் காலக்கட்டத்தில் குறைந்தது ஓராண்டாவது சிங்கப்பூரில் வசித்திருக்க வேண்டும்.
  (சான்று தேவைப்பட்டால் நூலாசிரியர் வழங்கத் தயாராய் இருக்க வேண்டும்.)

 3. எழுத்தாளர் கழகத்தின் தலைவர், செயலாளர் தவிர எழுத்தாளர் கழகத்தின் அனைத்து உறுப்பினர்களும் உறுப்பினரல்லாத சிறுகதை நூலாசிரியர்களும் பரிசளிப்புத் தேர்வுக்கு நூல்களை அனுப்பலாம். (நடுவர்கள் பற்றிய விவரம் எழுத்தாளர் கழகச் செயலவை உறுப்பினர்களுக்குத் தெரிவிக்கப்பட மாட்டாது.)

 4. பரிசுத் தேர்வுக்கான படிவத்தை நிரப்பி, கையெழுத்திட்டு நூலுடன் அனுப்ப வேண்டும்.

 5. ஒரு நூலாசிரியர் குறிப்பிட்ட மூவாண்டுக் காலக்கட்டத்தில் வெளியிட்ட எத்தனை நூல்களை வேண்டுமானாலும் போட்டிக்கு அனுப்பலாம். ஆனால் ஒவ்வொரு நூலுக்கும் நான்கு பிரதிகள் கட்டாயம் அனுப்ப வேண்டும். போட்டிக்கு அனுப்பப்படும் பிரதிகள் திரும்ப அனுப்பப்படமாட்டா.

 6. ஒவ்வொரு படைப்புக்கும் நான்கு பிரதிகளுடன் மென்நகலும் (soft-copy) மின்னஞ்சல் மூலம் கட்டாயம் அனுப்ப வேண்டும்.

 7. போட்டிக்கு அனுப்பப்படும் நூல்கள் முதல் பதிப்பாக இருக்க வேண்டும். பதிப்பிக்கப்பட்ட ஆண்டு தெளிவாக அச்சிடப்பட்டிருக்க வேண்டும். அந்த நூல்களுக்கு வெளியீட்டு விழா நடத்தியிருக்க வேண்டிய அவசியமில்லை.

 8. போட்டிக்கு நுழைவுக் கட்டணம் இல்லை

 9. சிறுகதை நூல் ஒரே எழுத்தாளர் எழுதிய நூலாக இருக்க வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட எழுத்தாளர்கள் எழுதிய நூல்களும் பல எழுத்தாளர்களின் கதைகள் இடம்பெற்றுள்ள தொகுப்பு நூல்களும் போட்டிக்கு ஏற்றுக்கொள்ளப்படமாட்டா. ஒவ்வோர் ஆண்டும் இந்த விதி பொருந்தும்.

 10. ஓர் எழுத்தாளர் ஒரு துறையில் ஒரு முறை மட்டுமே பரிசு பெற முடியும். சிறுகதைத் துறையில் ஏற்கனவே பரிசு பெற்றவர்கள் மீண்டும் சிறுகதைப் பரிசுக்குரிய போட்டியில் கலந்துகொள்ள முடியாது. கட்டுரை, கவிதைத் துறைகளுக்கும் இது பொருந்தும். ஆனால் ஒரு துறையில் பரிசு பெற்றவர் மற்ற துறைகளில் கலந்துகொள்ள முடியும்.

 11. சிங்கப்பூர், மலேசியா, தமிழ் நாடு ஆகிய மூன்று நாடுகளைச் சேர்ந்த மூன்று நடுவர்கள் பரிசுக்குரிய நூலைத் தெரிவு செய்வார்கள். அந்த நடுவர்களின் முடிவே இறுதியானது.

 12. சிறுகதைத் தொகுப்புகளையும் நிரப்பப்பட்ட படிவத்தையும் மென்நகலை மின்னஞ்சலிலும் வரும் 31.3.2022ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

 13. வன்நகல் நூல்களை அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி : Association of Singapore Tamil Writers, BLK 723 # 13-149, Yishun St 71, Singapore 760723.

 14. நூல்களின் மென்நகல் வடிவங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி : aavanna19@gmail.com.

           மேல் விவரங்களுக்கு: ---   தலைவர்: நா. ஆண்டியப்பன் – 9784 91050 அல்லது செயலாளர் பிரேமா - 9169 6996

           

ஆனந்த பவன் மு.கு. இராமச்சந்திரா நினைவு புத்தகப் பரிசளிப்பு
2024ம் ஆண்டு போட்டிக்கான விபரம்
இவ்வாண்டு (2024) போட்டிக்கான துறை : கட்டுரை
எனவே 2021, 2022, 2023 ஆகிய மூன்று ஆண்டுகளில் பதிப்பிக்கப்பட்ட கட்டுரை நூல்களை எழுத்தாளர்கள் இந்தப் பரிசளிப்புத் தேர்வுக்கு அனுப்பி வைக்கலாம்.
சிறந்த நூலாகத் தேர்ந்தெடுக்கப்படும்
ஒரு நூலுக்கு 3,000 வெள்ளி ரொக்கமும் சான்றிதழும் வழங்கப்படும்.