முத்தமிழ் விழா போட்டிகள்
முத்தமிழ் விழாவை ஒட்டி மாணவர்களுக்குப் போட்டிகள் நடத்தப்பட்டு இன்று பாலர் பள்ளி முதல் பல்கலைக்கழக மாணவர்கள் வரை ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 400-500 மாணவர்கள் இலக்கியப் போட்டிகளில் பங்கேற்கிறார்கள்.
பொது மக்களுக்கும் சிறுகதைப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. சில ஆண்டுகளில் குறுநாவல், கவிதைப் போட்டிகளும் நடத்தப்படுகின்றன.
முத்தமிழ் விழா சிறுகதைப் போட்டியுடன்
அறிவியல், வரலாற்றுக் கதைப் போட்டி
சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் இந்த ஆண்டு முத்தமிழ் விழாவை வழக்கம்போல் தமிழ் மொழி விழாவின் ஒரு பகுதியாக வரும் ஏப்ரல் மாதம் நடத்தவிருக்கிறது. முத்தமிழ் விழாவை ஒட்டி ஆண்டுதோறும் பொதுமக்களுக்கு இலக்கியப் போட்டிகள் நடத்துவது வழக்கம். ஆகவே, இந்த ஆண்டும் வழக்கம்போல் சிறுகதைப் போட்டி நடத்தப்படும்.
இவ்வாண்டும் கூடுதல் சிறப்பாக ஓர் சிறந்த அறிவியல் கதைக்கும் ஒரு சிறந்த வரலாற்றுக் கதைக்கும் தனியாகப் பரிசுகள் வழங்கப்படும்.
அனைத்துப் போட்டிகளுக்கும் படைப்புகள் வந்து சேர வேண்டிய இறுதி நாள்: 31.03.2023.
பொது மக்கள் – சிறுகதைப் போட்டிப் பரிசுகள்
முதல் பரிசு $500; 2ஆம் பரிசு $300; 3ஆம் பரிசு $200. 3 ஊக்கப் பரிசுகள் ஒவ்வொன்றும் $100.
பொது மக்கள் – சிறுகதைப் போட்டிக்கான விதிகள்
இவ்வாண்டு அழகு எனும் கருப்பொருளைக் கொண்டு கதைகள் புனையப்பட வேண்டும். கதைகள் சிங்கப்பூர்ச் சூழலில், நடப்பதாக அமைந்திருந்தால் சிறப்பு. பொது மக்கள் எழுதும் கதைகள் 1,200 முதல் 1,500 வார்த்தைகளுக்குள் இருக்க வேண்டும். ஒருவர் அதிகபட்சமாக 3 கதைகள் அனுப்பலாம். கதைகளை இந்த Google Drive Linkல் https://forms.gle/JUDrKzfetBDbbv7u9 31.03.2023ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
சிறப்புச் சிறுகதைகளுக்கான பரிசுகள்
சிறப்பு அறிவியல் சிறுகதைக்கு டாக்டர் காமேஸ்வரன் & டாக்டர் லலிதா காமேஸ்வரன் நினைவுப் பரிசு $250.00.
சிறப்பு வரலாற்றுச் சிறுகதைக்கு டாக்டர் சங்கரன் & முனைவர் சித்ரா சங்கரன் வழங்கும் பரிசு $250.00.
சிறப்புச் சிறுகதைகளுக்கான விதிகள்
போட்டியில் பங்கேற்போர் அறிவியல் கருவைக் கொண்ட கதைளையும் வரலாற்றுக் கருவைக் கொண்ட கதைகளையும் தனியாக அனுப்பலாம். கதைகள் சிங்கப்பூர்ச் சூழலில், நடப்பதாக அமைந்திருக்க வேண்டும். இந்தக் கதைகளும் 1,200 முதல் 1,500 வார்த்தைகளுக்குள் இருக்க வேண்டும். ஒருவர் இரண்டு கருக்களிலும் இரண்டு தனித்தனிக் கதைகளை அனுப்பலாம் அல்லது ஏதாவது ஒரு கருவில் ஒரு கதையை மட்டும் அனுப்பலாம். கதைகளை இந்த Google Drive Linkல் https://forms.gle/BVB1NPDtKWNHvkjH6 31.03.2023ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
சிறுகதைப் போட்டிகளுக்குப் பொதுவான விதிகள்
சிங்கப்பூர்க் குடியுரிமை பெற்றவர்களும் நிரந்தரவாசிகளும் மட்டுமே போட்டியில் பங்கேற்கலாம்.
எழுத்தாளர் கழகச் செயற்குழு உறுப்பினர்கள் போட்டிகளில் பங்கேற்க முடியாது. சிங்கப்பூர் எழுத்தாளர் கழகத்தின் மற்ற உறுப்பினர்களும் உறுப்பினர் அல்லாதவர்களும் பங்கேற்கலாம்.
கதைகள் எழுதப்பட்டுள்ள பக்கங்களில் பெயரோ மற்ற விவரங்களோ எழுதக் கூடாது. பெயர், முகவரி, தொடர்பு எண், மின்னஞ்சல் முகவரி போன்றவற்றைத் தனியாக Google Driveவில் பதிவு செய்ய வேண்டும்.
படைப்புகளைக் கூடியவரை கணினியில் அச்சிட்டுப் பதிவேற்ற வேண்டும். எழுதி வருடி (ஸ்கேன் செய்து) அனுப்பினால், கையெழுத்துப் புரியும்படி தெளிவாக இருக்க வேண்டும். அச்சிட்டாலும் எழுதினாலும் தாளின் ஒரு பக்கத்தில் மட்டுமே இருக்க வேண்டும். இரு பக்கங்களிலும் இருக்கக்கூடாது. கதைகளை Word அல்லது PDF வடிவத்தில் அனுப்பலாம்.
சிறுகதை தன்னுடையதுதான் என்றும் வேறு எந்த ஊடகத்திலும் வெளியாகவில்லை என்றும் உறுதி தெரிவிக்கப்பட வேண்டும்.
போட்டி குறித்த நடுவர்களின் முடிவே இறுதியானது.
போட்டி முடிவுகள் ஏப்ரலில் நடக்க இருக்கும் முத்தமிழ் விழாவில் வெளியிடப்படும்.
மேல் விவரங்களுக்கு எழுத்தாளர் கழகத் துணைத் தலைவர் திரு. சு. முத்துமாணிக்கத்தைத் (9675 3215) தொடர்பு கொள்ளலாம்.
எழுத்துச் செம்மல் சே.வெ. சண்முகம்-ருக்குமணி அம்மாள் நினைவு சிறுகதைப் போட்டி:
பல்கலைக்கழக மாணவர்களுக்கும் தேசியக் கல்விக் கழக மாணவர்களுக்கும் இளையர்களுக்கும்.
போட்டிகள் விவரம்
1. பாலர் பள்ளி மாணவர்களுக்கு - மாறுவேடப் போட்டி
2. தொடக்க நிலை 1 – 2 - மாறுவேடப் போட்டி
3. தொடக்க நிலை 3 – 4 - கதை சொல்லும் போட்டி
4. தொடக்க நிலை 5 – 6 - பேச்சுப் போட்டி
5. உயர்நிலை 1 – 2 – சொல்லுக்குச் சொல்
6. உயர்நிலை 3 – பத்திகளை மொழிபெயர்த்தல்
7. உயர்நிலை 4 – 5 – சிறுகதை எழுதுதல்
8. தொடக்கக்கல்லூரி, பலதுறை தொழிற் கல்லூரி,
& புதுமுக வகுப்பு மாணவர்களுக்கான போட்டிகள் - சிறுகதை எழுதுதல்
9. சிங்கப்பூர்க் குடியுரிமை பெற்றவர்களும் - அறிவியல், வரலாற்றுக்
நிரந்தரவாசிகளும் மட்டுமே கதைப்போட்டி
10. பல்கலைக்கழக மாணவர்களுக்கும் தேசியக்கல்விக் கழக மாணவர்களுக்கும் இளையர்களுக்கும்
- சிறுகதைப் போட்டி: