அமரர் சுப. அருணாசலம் நினைவு

சூழலுக்குப் பாடல் எழுதும் போட்டி

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் ஆண்டுதோறும் நடத்தும் கவியரசு கண்ணதாசன் விழாவை ஒட்டி சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழக முன்னாள் தலைவர் அமரர் சுப. அருணாசலம் நினைவாக அவரது குடும்பத்தினரின் நிதியாதரவுடன் “சூழலுக்குப் பாடல் எழுதும் போட்டி” ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முதல் பரிசு பெறும் பாடல் இசையமைக்கப்பட்டு கண்ணதாசன் விழாவில் ஒலிபரப்பப்படும்.

திரு. சுப. அருணாசலம் 25 ஆண்டுகளுக்கு மேலாகச் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தில் தன்னை இணைத்துக்கொண்டு அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றியவர். அவரது கணீர்க் குரலைக் கேட்டவர்கள் எளிதில் அதை மறந்திருக்க முடியாது.

அவரது நினைவாகக் கடந்த 2021ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தப் போட்டி, ஆண்டுதோறும் கண்ணதாசன் விழாவை ஒட்டி நடத்தப்படுகிறது

கவியரசு கண்ணதாசன் விழா

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் ஆண்டுதோறும் நடத்தும் கவியரசு கண்ணதாசன் விழாவில் அவர் பெயரில் விருது வழங்கி வருகிறது. கண்ணதாசன் ஒரு கவிஞர்; சிறுகதை, நாவல், கட்டுரை, நாடக எழுத்தாளர்; திரைக்கதை வசனம் எழுதியவர்; பாடலாசிரியர் என பலதிறன் படைத்தவர்; அந்தத் துறைகளிலே முத்திரை பதித்தவர்.

அதனால் மேற்குறிப்பிட்ட துறைகளில் குறைந்தது ஏதாவது ஒன்றில் சிறந்த திறன்காட்டி வரும் ஒருவர் ஆண்டுதோறும் தெரிவு செய்யப்பட்டு விருது வழங்கப்படுகிறது. அது அவர்களுக்கு மேலும் ஊக்கமளிப்பதாக இருக்கும் என்று எழுத்தாளர் கழகம் நம்புகிறது. மேலும் இந்த விருதுத் தேர்வில் பொது மக்களும் பங்களிக்க வேண்டும் என எழுத்தாளர் கழகம் விரும்புகிறது.

2012ம் ஆண்டு முதல் இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது.