1.கம்பன் விழா புதிர் போட்டி
(KAMBAN VIZHA QUIZ CONTEST FOR NIE, JC, POLY & UNI STUDENTS)
இந்தப் போட்டிகள் சிங்கப்பூர் கல்வி அமைச்சின் கீழ் செயல்படும் பலதுறைத் தொழிற் கல்லூரிகள், தேசியக் கல்விக் கழகம், சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம், நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகம், சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் (JC, POLY, NIE, NUS, NTU, SMU, SUSS) மாணவர்கள் பங்கு பெறலாம்.
2.கம்பன் விழா புதிர் போட்டி
(KAMBAN VIZHA QUIZ CONTEST FOR SECONDARY STUDENTS)
இந்தப் போட்டிகள் உயர்நிலை மாணவர்களுக்கு மூன்று பிரிவுகளாக நடத்தப்படும்.
உயர்நிலை 1&2 ஒரு பிரிவாகவும், உயர்நிலை 3 ஒரு பிரிவாகவும், உயர்நிலை 4&5 ஒரு பிரிவாகவும் போட்டிகள் நடைபெறும்.
ஒவ்வொரு பள்ளியும் ஒரு பிரிவுக்கு இரண்டு மாணவர்களைப் போட்டிக்குப் பதிவு
செய்யலாம். 3 பிரிவுகளுக்கும் மொத்தம் 6 மாணவர்களைப் பதிவு செய்யலாம்.
போட்டிப் பற்றிய விபரம்
போட்டியில் புதிர்க் கேள்விகள் Kahoot செயலியின் வழியாகக் கேட்கப்படும். ஒவ்வொரு கேள்விக்கும் நான்கு பதில்கள் கொடுக்கப்படும்; அவற்றில் சரியான பதிலை மாணவர்கள் பதிவிட வேண்டும்.
அதனால் மாணவர்கள் கட்டாயம் தங்கள் திறன்பேசிகளைக் (Smart phones) கொண்டு வர வேண்டும்.
கம்ப இராமாயணத்தின் குறிப்பிட்ட காண்டத்திலுள்ள குறிப்பிட்ட காட்சிப் படலத்திலிருந்து கொடுக்கப்பட்டுள்ள பாடல்களில் இருந்து 10/15/20 கேள்விகளுக்குப் பதில் அளிக்க வேண்டும்.