கவியரசு கண்ணதாசன் பாட்டுத் திறன் போட்டி
கவியரசு கண்ணதாசன் பாட்டுத் திறன் போட்டி 2 பிரிவுகளாக நடத்தப்படும்
6 வயது முதல் 14 வயது வரை உள்ளவர்களுக்கு ஒரு பிரிவாகவும், 14 வயதிற்கு மேலுள்ளவர்களுக்கு ஒரு பிரிவாகவும் போட்டி நடைபெறும். மாணவர்களும் பொது மக்களும் இதில் பங்கேற்கலாம். கவியரசு கண்ணதாசன் இயற்றிய திரைப்பாடல்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இந்தப் பட்டியலில் ஒவ்வொரு பிரிவுக்கும் உள்ள 60க்கு மேற்பட்ட பாடல்களில் ஏதாவது ஒரு பாடலைத் தேர்வு செய்து பாட வேண்டும்.
இந்தப் போட்டியில் ஆண்கள் ஆண்குரல் பாடல்களையும் பெண்கள் பெண்குரல் பாடல்களையும் பாட வேண்டும். மாற்றிப் பாடக்கூடாது. அந்தப் பட்டியலில் இல்லாத கண்ணதாசன் பாடல்களைப் பாட, எழுத்தாளர் கழகத்திடம் தெரிவித்து முன் அனுமதி பெற வேண்டும்.
பாடலைப் பின்னணி இசையில்லாமல் பாட வேண்டும். தேர்வுச் சுற்றுக்கு முழுப் பாடலையும் பாட வேண்டியதில்லை. பல்லவி, அனுபல்லவி மற்றும் முதலாவது சரணத்தை மட்டும் பாடினால் போதும்.
சிங்கப்பூரில் பணிபுரியும்/வசிக்கும் (அடையாள அட்டை அல்லது வேலை அனுமதிச் சீட்டு உள்ளவர்கள்)
யாரும் போட்டியில் பங்கேற்கலாம்
அமரர் சுப அருணாசலம் நினைவு சூழலுக்குப் பாடல் எழுதும் போட்டி
சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் ஆண்டுதோறும் நடத்தும் கவியரசு கண்ணதாசன் விழாவை வரும் நவம்பர் மாதம் 24ஆம் தேதி சிறப்பாக நடத்தவிருக்கிறது. அதனை ஒட்டி சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழக மேனாள் தலைவர் நினைவில் வாழும் சுப. அருணாசலம் நினைவாக அவரது குடும்பத்தினரின் நிதியாதரவுடன் “சூழலுக்குப் பாடல் எழுதும் போட்டி” ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பாடல் எழுதுவதற்கான சூழல் இதுதான்:
சிங்கப்பூர் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இடமாக இருக்கிறது.
சிங்கப்பூரில் பல பயணக் கவர்ச்சி இடங்கள் இருக்கின்றன.
அவற்றில் சிலவற்றைக் குறிப்பிட்டுப் பாடல் வரிகளை எழுத வேண்டும்.
பாடல் நகைச்சுவையாகக்கூட இருக்கலாம்.
அந்தப் போட்டிக்கான விதிகள் பின்வருமாறு:
16 வயதுக்கு மேற்பட்ட சிங்கப்பூர்க் குடியுரிமை உள்ளவராகவோ அல்லது நிரந்தரவாசியாகவோ இருக்க வேண்டும்.
சிங்கப்பூர்ச் சூழலில் ஒருவர் பாடுவதாகப் பாடல் அமைந்திருக்க வேண்டும்.
ஒரு பல்லவி மற்றும் 3 சரணங்கள் இருக்க வேண்டும். ஒவ்வொன்றும் 4 வரிகளில்,
மொத்தம் 16 வரிகள் மட்டுமே இருக்க வேண்டும். ஒருவர் அதிகபட்சமாக 3 பாடல்கள் வரை அனுப்பலாம்,
நடுவர்களால் தெரிவு செய்யப்படும் மூன்று பாடல்களுக்குப் பரிசுகள் வழங்கப்படும் :
முதல் பரிசு $300.00; இரண்டாம் பரிசு $250.00; மூன்றாம் பரிசு $150.00.
முதல் பரிசு பெறும் பாடல் இசையமைக்கப்பட்டு கண்ணதாசன் விழாவில் ஒலிபரப்பப்படும்.
https://forms.gle/ZZPX2GC7uPmHKie5A எனும் இணைப்பு (link) மூலம் கூகுள் படிவத்திற்குச் சென்று
அதனை நிரப்பி பாடல்களுடன் அனுப்ப வேண்டிய இறுதி நாள் 15.09.2024.
மேல் விவரங்களுக்கு
திரு. நா. ஆண்டியப்பன் – 97849105; திரு. சு. முத்துமாணிக்கம் – 96753215; திருவாட்டி பிரேமா மகாலிங்கம் – 91696996 ஆகியோரைத் தொடர்பு கொள்ளலாம். அல்லது www.singaporetamilwriters.com இணையத் தளத்தை நாடலாம்.
போட்டிக்குரிய கண்ணதாசன் பாடல்களை காண கீழுலள்ள லிங்கை கிளிக் செய்யவும்