சிங்கப்பூரில் 1976ல் தொடங்கப்பட்ட சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் கடந்த சுமார் 48 ஆண்டுகளாக மொழி வளர்ச்சிக்கும் இலக்கிய வளர்ச்சிக்கும் பாடுபட்டு வருகிறது. எழுத்தாளர் நலனைக் கருத்திற்கொண்டு அமைக்கப்பட்ட இதில் இப்போது சுமார் 115 உறுப்பினர்கள் இருக்கின்றனர். இவர்களில் 90 விழுக்காட்டிற்கு மேற்பட்டோர் வாழ்நாள் உறுப்பினர்கள். இலக்கிய வளர்ச்சிக்குப் பல்வேறு திட்டங்களைத் தீட்டி, செயற்படுத்திவரும் எழுத்தாளர் கழகம் தமிழ் மொழியையும் பண்பாட்டையும் பேணி வளர்க்கும் விதத்தில் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து பீடுநடை போட்டு வருகிறது.
எங்கள் பணி
விழாக்கள், போட்டிகள், கலந்துரையாடல்கள், கருத்தரங்குகள், பயிலரங்குகள் மூலம் தமிழில் புதிய, இளம் படைப்பாளிகள் உருவாகக் களம் அமைத்துக் கொடுத்தல்; எழுத்துத் தமிழுடன் பேச்சுத் தமிழை ஊக்குவித்தல்.
எங்கள் தொலைநோக்கு
பல சிறப்புக்களைக் கொண்ட நம் தாய்மொழியாம் செம்மொழித் தமிழை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சென்று புதிய படைப்பாளிகளை உருவாக்குதல்.